குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுக்கிறது - மழை அதிகரிக்கும்

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழ்நாடு, இலங்கை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று அதிகபட்சமாக திருச்செந்தூரில் 3 சென்டி மீட்டர் மழை பெய்தது. பூதப்பாடியில் 2 சென்டி மீட்டரும், சென்னை நுங்கம்பாக்கம், பொன்னேரி, தென்காசி, தக்கலை ஆகிய இடங்களில் தலா 1 சென்டி மீட்டரும் மழை பதிவாகியது.
இந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில்,
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும்,உள்பட பல இடங்களிலும், புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பகலிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இரவில் இடியுடன் மழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி நாகை மாவட்டம் சீர்காழியில் 7 செ.மீ மழை பதிவானது.
பொன்னேரியில் 4, மயிலாடுதுறையில் 3, தாம்பரம், உத்திரமேரூர், பரங்கிப்பேட்டை, பாம்பன், ராமேஸ்வரம், ராமநாதபுரம், குன்னூர் தலா 2 செமீ, சென்னை, மதுராந்தகம், காரைக்கால், திருத்துறைப்பூண்டி, சாத்தான்குளம், ஆரணி, வந்தவாசி தலா ஒரு செமீ மழை பதிவானது.
சென்னையில்...
இன்று அதிகாலையிலிருந்தே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மேகம் சூழ்ந்து லேசான மழை பெய்து வந்தது. ஆனால் பிற்பகலுக்கு மேல் புறநகர்ப் பகுதிகளில் மழை குறைந்து லேசான வெயில் அடித்தது. வானம் லேசான மேக மூட்டத்துடன் தொடர்ந்து காணப்பட்டது.
ரெயின் கோட் வி்ற்பனை சூடு பிடித்தது...
நேற்று மாலையே மழை வந்து விட்டதால் சென்னை நகர பிளாட்பாரங்களில் ரெயின் கோட் விற்போர் குவியத் தொடங்கி விட்டனர். மழையிலிருந்து தப்ப மழை வந்தவுடன்தான் ரெயின் கோட் வாங்கும் 'நல்ல' பழக்கம் உடையோர் இவர்களிடம் ரெயின் கோட் வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications