தினையளவு நன்மை..பனையளவு கொள்ளை- விஜயகாந்த்
சென்னை: கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் நிறுவனங்களும், புரோக்கர்களும் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்க வழி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 20ம் தேதி வரை 5,817 பேர் இலவச உயர் சிகிச்சை பெற்றவர்கள் என்றும், இதற்கான செலவு 23 கோடியே 21 லட்சம் ரூபாய் என்றும் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 59 லட்சம் என்றும் விளம்பரம் செய்யப்படுகிறது.
ஆனால், சுகாதாரத் துறை அமைச்சர் அளித்த பேட்டியில், இதுவரை 6,000க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும், 6.5 லட்சம் குடும்பங்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, 20 லட்சத்து 36 ஆயிரம் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார். இதில் எது சரி?.
மேலும் இந்த கலைஞர் காப்பீட்டு திட்டம் துவங்கிய தினமே ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 130 கோடிக்கான காசோலையை மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுத்தது என்ன நியாயம்?.
ஏழைகளுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தேவைதான். ஆனால், அந்தத் திட்டத்தில் சமூகவிரோதிகள் கொள்ளை அடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மக்களுக்கு தினையளவு நன்மை என்றால் இதைச் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு பனையளவு கொள்ளையடிக்க வழி செய்துள்ளது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications