தமிழர்கள் மறுகுடியேற்ற நடவடிக்கை - அமெரிக்கா வரவேற்பு

இதுகுறித்து அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடம் பெயர்ந்தோர் முகாம்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. இதை அமெரிக்கா வரவேற்கிறது.
அடுத்த சில நாட்களில் மேலும் 40 ஆயிரம் பேர் சொந்த கிராமங்களுக்கு அனுப்பப்படுவர் என்று அரசு அறிவித்திருப்பதை அமெரிக்கா வரவேற்றுப் பாராட்டுகிறது.
ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வரும்.
இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள அனைத்து மக்களையும் விடுவித்து சொந்த ஊர்களில் அவர்கள் குடியேற இலங்கை அரசு வழி வகை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க் குற்ற விசாரணை- வெறும் கண்துடைப்பு...
இதற்கிடையே, ஈழப் போரின் கடைசி நாட்களில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் கோரிக்கைப்படி விசாரணை நடத்துவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது வெறும் கண் துடைப்பு என்று மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவிலான போர்க்குற்ற விசாரணை நடவடிக்கை பாய்ந்து விடாமல் தடுக்கவே அவசரம் அவசரமாக தானே விசாரிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அமைப்பின் ஆசிய இயக்குநர் பிராட் ஆடம்ஸ் கூறுகையில், காலத்தை வீணடித்து, இலங்கையில் நடந்த ரத்தக்களறியை உலக சமுதாயம் மறக்கும் வரை இழுத்தடித்து, இந்த அவலத்தை அப்படியே மரித்துப் போக வைக்கும் முயற்சியாகவே இலங்கை அரசின் அவசர அறிவிப்பை எடுத்துக் கொள்ள முடியும்.
போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் துரோகச் செயல் இது.
மனித உரிமை மீறல் அவலங்களை குழி தோண்டிப் புதைதக்கும் வகையிலான இன்னொரு முயற்சியாகவே இந்த விசாரணை அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த போரின் இறுதி நாட்களில் நடந்த அவலங்களை வெளிக் கொண்டு வர வேண்டுமானால், சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றுதான் ஒரே வழி என்று கூறியுள்ளார் பிராட் ஆடம்ஸ்.
-
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications