நீதிபதி பி.டி.தினகரனுக்கு எதிராக கிராம மக்கள் போர்க்கொடி
சென்னை: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரனால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரம் கிராம மக்கள் கோரியுள்ளனர்.
மேலும் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள பி.டி.தினகரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்களைக் குவித்தது, அரசு நிலத்தை ஆக்கிரமித்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தினகரனுக்கு எதிராக குவிந்து வருகின்றன.
காவேரி ராஜபுரத்தில் அரசு நிலத்தை பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் தினகரன் என்பது ஒரு குற்றச்சாட்டு. அவர் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது உண்மையே என்று தாசில்தார் உள்ளிட்டோர் அறிக்கை கொடுத்துள்ளனர். இது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில், தினகரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காவேரிராஜபுரம் கிராம மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இதுகுறித்து காவேரிராஜபுரம் தாளம் அறக்கட்டளை நிறுவனரும், நில ஆக்கிரமிப்புக்கு எதிரான அமைப்பின் தலைவருமான எம்.ராமன் கூறுகையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த வேலியை தினகரனின் ஆட்கள் அறுத்து எரிந்துள்ளனர். இதுவே அவரது ஆக்கிரமிப்புக்கு உதாரணமாகும்.
மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது உண்மையே என்று அறிக்கை கொடுத்துள்ளனர்.
எனவே தினகரன் மீது அரசு உரிய நடவடிக்கை, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், நவம்பர் 9ம் தேதி தினகரனுக்குச் சொந்தமான 362.8 ஏக்கர் மாந்தோப்புக்கு அருகே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலத்தில் புகும் போராட்டத்தை நடத்தப் போகிறோம். இந்தப் போராட்டத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்போம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications