78 தமிழ் அகதிகளை ஏற்க ஆஸ்திரேலியா மறுப்பு
சிட்னி: படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி வரும் வழியில், ஆஸ்திரேலிய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு தற்போது இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள 78 தமிழர்களை ஏற்க முடியாது என ஆஸ்திரேலியா தெரிவித்து விட்டது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு 78 தமிழர்களுடன் வந்த படகை ஆஸ்திரேலிய சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களை இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இவர்கள் இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களை மீண்டும் ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதுதொடர்பாக இந்தோனேசிய அதிபர் பம்பாங் சுசிலோவுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டது. இந்தோனேசியாவில் இவர்களை வைத்துப் பராமரிப்பது, அதற்கான செலவுகளை ஆஸ்திரேலியா வழங்கும் என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது என்றார்.
தற்போது சிங்கப்பூர் அருகே உள்ள பின்டன் தீவு என்ற இடத்தில் தமிழர்கள் இடம் பெற்றுள்ள ஓசியானிக் வைகிங் என்ற அந்த படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து இறங்க அதில் உள்ள தமிழர்கள் மறுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, இவர்களை முகாமில் தங்க வைக்க போதிய வசதி இல்லை என்று பின்டன் தீவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீவன் ஸ்மித் கூறுகையில், நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அகதிகளை மீட்டால் அவர்களை இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைப்பது எனவும், அவர்களின் எதிர்காலம் குறித்து ஐ.நா. அகதிகளுக்கான ஆணையர் முடிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே இந்தோனேசியாவுடன், ஆஸ்திரேலியா உடன்பாடு கண்டுள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications