ஜெய்ப்பூர் எண்ணை கிடங்கில் பயங்கர தீ - 12 பேர் பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள எண்ணை கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். தொடர்ந்து தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது.
தீ அதுவாக அணைந்தால்தான் உண்டு, வேறு வழி இல்லை என்று இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் அருகே உள்ள இந்தியன் ஆயில் எண்ணை கிடங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து படு வேகமாக தீ பரவி டிப்போ முழுவதும் கொளுந்து விட்டு எரிகிறது.
இந்த தீவிபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிபத்து குறித்த தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்தார் முரளி தியோரா. தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது, இப்போது யாரும் எதுவும் செய்ய முடியாது. அதுவாக அணைந்தால்தான் உண்டு. இதற்கு மாற்று வழி கிடையாது என்றார் தியோரா.
தீ தொடர்ந்து தீவிரமடையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் யாரும் எதுவும் செய்ய முடியாத நிலை. இதற்கு மாற்று வழியும் இல்லை என்றார் தியோரா.
பாதிக்கப்பட்டோருக்கு உதவ அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று இரவு இங்கு தீவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தீ எரிந்து கொண்டுள்ளது. இதுவரை 12 பேர் இறந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
டிப்போவிலிருந்து ஒரு பைப்லைனுக்கு பெட்ரோலை மாற்றியபோது தீவிபத்து ஏற்பட்டது. பைப்லைனில் இருந்த கசிவுதான் விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
1.5 லட்சம் மக்கள் வெளியேற்றம்:
விபத்து காரணமாக டிப்போவுக்கு அருகில் உள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் மக்கள், பத்து பொறியியல் கல்லூரிகளின் விடுதிகளில் தங்கியிருந்தோர் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்தப் பகுதி முழுவதும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications