அவமதிப்பு-டிஜிபி மீதான புகார்-'முகாந்திரம் இல்லை'
சென்னை: உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள், - போலீஸார் இடையே நடந்த மோதல் தொடர்பாக தமிழக டிஜிபி மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று உயர்நீதிமன்ற வக்கீல்கள் - போலீஸார் இடையே நடந்த மோதல் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் இப்ராஹிம் கலிஃபுல்லா, ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில்,
தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் தமிழக டி.ஜி.பி., உளவுத் துறை டி.ஜி.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை.
அதேபோல், வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை.
நீதித்துறை சிறப்பாக செயல்பட போலீஸார், வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். அவர்களுக்கு இடையே எழும் வேறுபாடுகளை சுமூகமான முறையில் பேசி தீர்க்க மாநில, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.
உயர் நீதிமன்ற மோதல் சம்பவம் தொடர்பாக ஒரு சில போலீஸ் அதிகாரிகள் தவறு செய்துள்ளதாக கண்டறிந்துள்ளோம். ஆனால், ஒட்டுமொத்த போலீஸாரும் தவறு செய்துள்ளதாகக் கருதக் கூடாது.
பிப்ரவரி 17-ம் தேதிக்கு முன்னதாக உயர் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு மீண்டும் வழங்க வேண்டும். அதேபோல், மாவட்ட நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
உயர் நீதிமன்ற மோதல் சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர்கள் மற்றும் போலீஸார் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பான விசாரணை சி.பிஐ தொடர்ந்து மேற்கொள்ளலாம்.
இந்த விசாரணை அறிக்கையை 3 மாதங்களுக்குள் சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
வக்கீல்கள் வரவேற்பு...
இந்த நிலையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை வக்கீல்கள் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.
உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் கூறுகையில், வழக்கறிஞர்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததால் இந்த வழக்கில் வெற்றி கிடைத்துள்ளது. நீதிமன்றப் புறக்கணிப்பு தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை நாங்கள் பின்பற்றுவோம் என்றார்.
தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் கூறுகையில், மோதல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தும் என்று நம்புகிறோம் என்றார்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்!












Click it and Unblock the Notifications