யுஎஸ்: எப்பிஐ தாக்குதல்- முஸ்லீம் தலைவர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் உம்மா என்ற அமைப்பின் தலைவராக இருந்த கிருஸ்டோபர் தாமஸ் என்ற லுக்மான் அமீன் அப்துல்லா (53) மீது லேப்டாப்கள், தோல் பொருட்களை கடத்தி வந்து விற்பது, சட்ட விரோதமாக துப்பாக்கிகள் வைத்திருப்பது ஆகிய வழக்குகள் பதிவானயின.
இதையடுத்து இவரைக் கைது செய்ய எப்பிஐ அதிகாரிகள் மிச்சிகனில் உள்ள டியர்பார்ன் என்ற பகுதியில் உள்ள இவரது கிட்டங்கிக்குச் சென்றனர்.
அப்போது அதிகாரிகளிடம் சரணடைய மறுத்த அப்துல்லா, அவர்களை நோக்கி சுட்டார். இதையடுத்து எப்பிஐ அதிகாரிகள் திருப்பிச் சுட்டதில் அவர் பலியானார்.
அப்துல்லாவின் கூட்டாளிகளான 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் எப்பிஐ தாக்கல் செய்துள்ள வழக்கில், அமெரிக்காவில் ஒரு இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது தான் உம்மா அமைப்பின் குறிக்கோள் என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த அமைப்பின் மீது தீவிரவாத குற்றச்சாட்டு எதையும் எப்பிஐ பதிவு செய்யவில்லை.
இந்த அமைப்பில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் கறுப்பின அமெரிக்கர்கள் ஆவர். இவர்களில் பலர் சிறைகளில் இருந்தபோது மதம் மாறியுள்ளதாகவும் எப்பிஐ கூறியுள்ளது.
-
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications