தமிழர்களை காலவரையின்றி தங்க வைக்க முடியாது- இந்தோனேசியா
ஜகார்த்தா: படகில் உள்ள 78 இலங்கைத் தமிழர்களை காலவரையின்றி தங்குவதற்கு அனுமதிக்க முடியாது என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விரும்பி படகில் வந்த 78 இலங்கைத் தமிழர்களை மடக்கிய ஆஸ்திரேலிய சுங்கத்துறையினர் அவர்களை இந்தோனேசியாவுக்குத் திருப்பி அனுப்பி விட்டனர்.
தற்போது மேற்கு ஜாவா கடல் பகுதி துறைமுகத்தில் இந்தத் தமிழர்கள் படகிலேயே தங்கியுள்ளனர். தங்களுக்குப் புகலிடம் கொடுத்தால்தான் இறங்கி வருவோம் என்று கூறி வருகின்றனர்.
இதனால் பெரும் தர்மசங்கடத்தில் இந்தோனேசியாவும், ஆஸ்திரேலியாவும் சிக்கியுள்ளன.
நேற்று அவர்களை நாடு கடத்தப் போவதாக இந்தோனேசிய வெளியுவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெகு பைசாஷ்யா கூறியிருந்தார். இந்த நிலையில், அவர்களை தற்காலிகமாக வேண்டுமானால் தங்க வைக்க முடியும். ஆனால் காலவரையின்றி இங்கு தங்க வைக்கமுடியாது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அகதிகளாக படகில் இருப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்டாலும் கூட அவர்களை தற்காலிகமாகத்தான் இங்கு தங்க வைக்க முடியும். ஆனால் முன்பு போல நிரந்தரமாவோ அல்லது காலவரையின்றியோ தங்க வைப்பது முடியாத காரியம்.
ஒருவேளை அவர்களை அகதிகளாக அங்கீகரிக்காவிட்டால் என்ன செய்வது, அவர்களை எங்கு கொண்டு செல்வது என்பதும் தெளிவாக்கப்பட வேண்டியுள்ளது என்றார் அவர்.
இந்த நிலையில் ஏற்கனவே இந்தோனேசியாவில் தஞ்சம் புகுந்துள்ள 251 பேர் கொண்ட தமிழ் அகதிகள் குழு தொடர்ந்து பல நாட்களாக சிறிய கப்பலில் இருந்தபடி போராட்டம் நடத்தி வருகிறது. அவர்களின் நிலையும் இதுவரை தெளிவாகாமல் உள்ளது. இவர்கள் மேரக் துறைமுகத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications