முஷாரப் சொத்துக்களை முடக்க கோர்ட் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தற்போது லண்டனில் போய் உட்கார்ந்துள்ளார். பாகிஸ்தான் கோர்ட்டில் அவர் மீது வழக்குகள் உள்ளதால் வந்தால் கைது செய்யப்படுவோம் என்பதால் பாகிஸ்தானுக்குத் திரும்பாமல் இருக்கிறார முஷாரப்.
இந்த நிலையில், வட மேற்கு எல்லைப் புற மாகாணத்தில் உள்ள அப்போட்டாபாத் மாவட்ட செஷன்ஸ் கோர்ட், முஷாரப்பை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்குமாறும், அவர் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுத்தால், சொத்துக்களைப் பறிமுதல் செய்யலாம் என்றும் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
அப்போட்டாபாத் நகரைச் சேர்ந்த ஒருவர் முஷாரப் ஆட்சிக்காலத்தி்ல காணாமல் போனார். இவரை முஷாரப்பின் ஆட்கள்தான் கடத்தி விட்டதாக கூறி அவரது குடும்பத்தினர் முஷாரப் மீது போலீஸில் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பியும் முஷாரப் வரவில்லை.
இதையடுத்து அந்த வாலிபரின் குடும்பத்தினர் கோர்ட்டை அணுகினர். இதை விசாரித்த கோர்ட், முஷாரப் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கலாம். அவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என போலீஸாருக்கு உத்தரவிட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications