தீவிரவாதியை சுட்டு வீழ்த்திய ருக்ஷானாவுக்கு போலீஸ் அதிகாரி பதவி- டெல்லிக்கு மாற்றம்

அவர் மட்டும்லலாமல் அவரது சகோதரர், உறவினருக்கும் இதேபோன்ற பதவியை தந்துள்ளது ஜம்மு காஷ்மீர் காவல்துறை.
கடந்த செப்டம்பர் 27ம் தேதி ரஜோரியில் உள்ள ருக்ஷானாவின் வீட்டுக்குள் லஷ்கர் தீவிரவாதிகள் புகுந்தனர். இதையடுத்து அவர்களைத் தாக்கிய ருக்ஷானா தீவிரவாதிகள் கையில் வைத்திருந்த ஏ.கே. 47 துப்பாக்கியை வாங்கி சரமாரியாக சுட்டார். இதில் முக்கியத் தீவிரவாதி கொல்லப்பட்டான். இன்னொருவன் காயமடைந்தான்.
இந்த வீரச் செயல் நாடு முழுவதும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி போலீஸ் காலனிப் பகுதியில் ருக்ஷானாவுக்கு வீடு தரப்பட்டு பாதுகாப்புடன் அவர் குடிமயர்த்தப்பட்டார்.
சமீபத்தில் ருக்ஷானாவின் வீட்டை தீவிரவாதிகள் தாக்கினர். ஆனால் அவர் குடும்பத்தினர் யாரும வீட்டில் அப்போது இல்லை.
இந்த நிலையில், ருக்ஷனாவுக்கு சிறப்பு போலீஸ் அதிகாரி பதவி தரப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஜோரி மாவட்ட மூத்த எஸ்.பி. ஷப்கத் வட்டாலி கூறுகையில், ருக்ஷானா அவரது சகோதரர் அஜீஸ், உறவினர் வக்காலத் ஹூசேன் ஆகியோர் தீவிரவாதிகள் தாக்குதலில் காயமடைந்தனர். அனைவரும் சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
டெல்லிக்கு இடமாற்றம்...
இந் நிலையில் பாதுகாப்பு காரணங்களுகாக ருக்ஷானா டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை மத்திய உளவுப் பிரிவினர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ருக்ஷானாவை தீர்த்துக் கட்டுமாறு தீவிரவாதிகளுக்கு உத்தரவு வந்துள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு்ள்ளது.
ஆனால், அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லிக்கு மாற்றப்படவில்லை என்றும் எம்.எஸ்.பிட்டா ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளத்தான் ருக்ஷானாவும், அவரது சகோதரரும் டெல்லி சென்றுள்ளதாக ரஜோரி மாவட்ட எஸ்.பி. ஷப்கத் வட்டாலி கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications