கலைஞர் காப்பீடு-கூடுதல் வசூல் செய்தால் நடவடிக்கை
சிதம்பரம்: கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் கூடுதலாக பணம் வசூலிக்கும் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம், குறிஞ்சிப்பாடி மற்றும் காட்டுமன்னார் கோவிலில், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில், சிதம்பரம் அரசு பெண்கள் பள்ளியில் நடந்த முகாமை, சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் துவக்கி வைத்து பேசுகையில்,
கலைஞர் காப்பீடு திட்டத்தில், சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள பிரபல மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் கிராமக மக்களுக்கு கூட சிகிச்சை அளிக்கின்றனர்.
கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஒரு கோடி குடும்பங்களுக்கு மேல் பயனடையும் வகையில் திட்டமிடப்பட்டு, 78 லட்சத்து 17 ஆயிரம் குடும்பங்களுக்கு புகைப்படும் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 27 லட்சத்து நான்காயிரம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில், இரண்டு லட்சத்து 64 ஆயிரத்து 934 குடும்பங்களுக்கு புகைப்படும் எடுக்கும் பணி நடந்து வருகிறது. அதில் 22 ஆயிரத்து 172 குடும்பங்களுக்கு காப்பீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது. அவ்வாறு வசூல் செய்தால் அந்த மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications