என்.டி. திவாரியை தந்தையாக அறிவிக்க வாலிபர் கோரிக்கை: வழக்கு தள்ளுபடி

உத்தரப் பிரதேசம் மாநிலம் மற்றும் உத்தரகாண்ட் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த என்.டி.திவாரி, அரசியலில் தீவிரமாக இருந்த காலத்தில் காங்கிரஸ் மகளிர் அணியில் தீவிரமாக செயல்பட்ட எனது தாயார் உஜ்வாலா சர்மாவுடன் தொடர்பு வைத்திருந்தார்.
இருவரும் கணவன்- மனைவியாக வாழ்ந்தனர். இதன் மூலம் நான் பிறந்தேன். இதை எனது தாயாரும் நீதிமன்றத்திடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். எனவே திவாரி தான் எனது உண்மையான தந்தை.
ஆனால் என்.டி.திவாரி இப்போது என்னை மகனாக ஏற்க மறுக்கிறார். எனவே என்னை அவர் மகனாக ஏற்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி திங்காரா முன் விசாரணைக்கு வந்தது. என்.டி.திவாரி சார்பில் இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவர் சார்பில் ஆஜராகி வழக்கறிஞர் ராஜீவ் நாயர், ரோகித் சேகர் பொய்யான தகவலை கூறியிருக்கிறார். வாரிசு உரிமை கேட்பதாக இருந்தால் உரிய காலத்தில் கேட்க வேண்டும் என்ற சட்டவிதி உள்ளது. இவர் அந்த கால கட்டங்களை எல்லாம் கடந்து கேட்கிறார். எனவே இந்த வழக்கு விசாரணைக்கே ஏற்றது அல்ல. எனவே தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இதை நீதிபதி திங்கா ஏற்றுக் கொண்டு ரோகித் சேகர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கணவரைப் பிரிந்தவரான உஜ்வாலா, நான் தனியே வசித்தபோது திவாரியுடன் தொடர்பு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications