லோக்கல் கால் 10 பைசா-எஸ்டிடி 25 பைசா!
டெல்லி: நாடு முழுவதும் செல்போன் கட்டணங்கள் மேலும் குறையவுள்ளன.
லோக்கல் கால் நிமிடத்துக்கு 10 பைசாவாகவும், எஸ்டிடி கட்டணம் நிமிடத்துக்கு 25 பைசாவாகவும் குறைய உள்ளது.
இப்போது நிலவும் கடும் போட்டி காரணம் ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்ற அளவுக்கு கட்டணங்கள் சரிந்துவிட்டன. ஆனால், டெர்மினேசன் சார்ஜ் என்று சொல்லி ஒரு கட்டணத்தை செல்போன் நிறுவனங்கள் மக்களிடம் சுருட்டி வருகின்றன.
இதனால் வெளியில் வினாடிக்கு 1 பைசா தான் என்று சொன்னாலும் கூடுதலாகக் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.
டெர்மினேசன் சார்ஜ் என்பது ஒரு செல்போன் நிறுவனத்தின் தொலைபேசியில் இருந்து அடுத்த நிறுவனத்தின் செல்போனுக்குத் தொடர்பு கொள்ளும்போது வசூலிக்கப்படும் கட்டணமாகும்.
இந்தக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறியுள்ளார். நேற்று செல்போன் நிறுவன செயல் அதிகாரிகள் கூட்டத்தி்ல் பேசிய ராஜா, இந்தக் கட்டணத்தை உடனே குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.
இது 2010க்குள் நடைமுறைக்கு வந்தாக வேண்டும் என்று ராசா கூறியதாகத் தெரிகிறது.
இது நடந்தால் லோக்கல் கால் நிமிடத்துக்கு 10 பைசாவாகவும், எஸ்டிடி கட்டணம் நிமிடத்துக்கு 25 பைசாவாகவும் குறையும்.
மேலும், செல்போன் சேவை தொடங்க சமீபத்தில் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் 3 மாதங்களுக்குள் சேவையைத் தொடங்காவிட்டால் கடும் அபாரதம் விதிக்கப்படும் என்றும், லைசென்ஸே ரத்தாகும் என்றும் ராசா எச்சரித்தார்.
இது தவிர கிராமப் பகுதிகளில் செல்போன், இன்டர்நெட் உள்ளிட்ட சேவைகளை அதிகளவில் ஊடுருவச் செய்ய உருவாக்கப்பட்டுள்ள நிதியத்துக்கு ஆண்டுதோறும் செல்போன் நிறுவனங்கள் தங்கள் வருவாயில் 5 சதவீதத்தை ஒதுக்கி வருகின்றன. இந்த நிதி ரூ. 25,000 கோடி அளவுக்கு சேர்ந்துள்ளது. இந்த நிதியை எப்படி முறையாக செலவிடலாம் என்பது குறித்தும் செல்போன் நிறுவன அதிகாரிகளுடன் ராசா விவாதித்தார்.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications