டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 8 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய 8 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். இதுதொடர்பாக 3 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
காரைக்குடியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து மது விலக்குப் பிரிவு போலீஸார் அங்கு விரைந்தனர். அந்தக் கடையுடன் ஒட்டியுள்ள பாரில் சோதனையிட்டபோது, அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் கடையின் விற்பனையாளர் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.
அந்த பாரிலிருந்து 100 லிட்டர் கள்ளச்சாராயம், 500 காலி பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கள்ளச்சாராயத்தைக் காய்ச்சி அதை பாட்டில்களில் அடைத்து கடை மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications