காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்தது- தென் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும்

வங்கக்கடலின் தென் மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் தீவிரம் அடைந்து வருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மேலும் 24 மணி நேரம் மழை நீடிக்கும். கடலோர மாவட்டங்களில் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்யும்.
தென் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப் படும். சில பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
ராமேஸ்வரத்தில் கன மழை..
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 8 செமீ மழை பெய்துள்ளது.
மயிலாடுதுறை, தரங்கம்பாடியில் தலா 6 செமீ மழை, திருத்துறைப்பூண்டி, சீர்காழி, பாம்பன், ராமநாதபுரத்தில் தலா 4 செமீ, பூண்டி, திருத்தணி, காட்டுமன்னார்கோவில், உளுந்தூர்ப்பேட்டை, புதுச்சேரி, நாகை, ஆரணி, கோத்தகிரி ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழையும் பெய்துள்ளது.
சென்னையில் மழை...
இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகரமே குளிர்ந்து ஈரக் காடாகியுள்ளது.
நகரின் பல பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புறநகர்ப் பகுதிகளில் குளிர்காற்றுடன் மழை பெய்து கொண்டிருக்கிறது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications