ராமதாஸ் திக்கு தெரியாத காட்டில்: சரத்குமார்

சேலத்தில் நடந்த தனது கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நடிகர்களுக்கு அரசியல் தெரியாது என்று டாக்டர் ராமதாஸ் கூறுகிறார். அப்படியென்றால், கலை உலகைச் சேர்ந்த ஜெயலலிதாவுடன் கூட்டணி ஏன் கூட்டணி அமைத்தார்?.
முதல்வர் கருணாநிதியும் கலை உலகைச் சேர்ந்தவர் தான். அவருடன் எப்படி கூட்டணி அமைத்தார். தற்போது ராமதாஸ் திக்கு தெரியாத காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்.
அவரைப் பற்றி நான் அதிகமாக குறைகூற கூடாது. அப்படிக் குறை கூறுபவன் அல்ல நான். ஆனால் எதிர்காலத்தில் அடிக்கடி கூட்டணி மாறுபவர்களுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளாது.
வரும் 12ம் தேதி கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும், கூட்டணி வைத்து சந்திப்பதா? யாருடைய ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுவது என்பது குறித்து கருத்துக் கேட்கப்படும்.
அதன்பிறகு 3 நாட்கள் அந்த கருத்துக்களை பரிசீலித்து, தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்து அறிவிப்பேன்.
கூட்டணி அமைவது கொள்கை அடிப்படையில் அமையும். எங்கள் இயக்கத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் கொள்கைகள் கொண்ட கட்சியுடன் கூட்டணி அமையும். கடந்த தேர்தலில் அமைந்த கூட்டணியாக நிச்சயம் அது இருக்காது.
திமுக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் பிரச்சனையை தவிர மற்ற விவகாரங்களில் தமிழக அரசு நன்றாக செயல்பட்டு வருகிறது என்றார் சரத்.
இப்போது தெரிகிறதா அவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்று?!.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications