ஹைதராபாத்தில் 21 வயது குத்துச்சண்டை வீராங்கனை மர்ம மரணம்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான அமராவதி என்ற குத்துச் சண்டை வீராங்கனை, ஹைதராபாத் லால் பகதூர் ஸ்டேடிய விடுதி அறையில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார்.
பயிற்சியாளரின் கடுமையான போக்கால்தான் தங்களது மகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அமராவதியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் போட்டியில் வெல்ல மாட்டோம் என்ற நம்பிக்கையின்மையால்தான் அமராவதி தற்கொலை செய்து கொண்டிருப்பதாக விடுதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அமராவதி பிணமாகக் கிடந்த அறை முழுவதும் வாந்தி எடுத்த அடையாளம் காணப்படுகிறது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே அமராவதி எப்படி இறந்தார் என்பது தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை காலை வழக்கமான பயிற்சிக்கு அமராவதி வரவில்லை. இதையடுத்து விடுதி வார்டன் கமலா குமாரி, அமராவதியின் அறைக்கு சென்றார். ஆனால் அறை உள்புறமாக பூட்டிக் கிடந்தது.
இதையடுத்து விடுதி ஊழியர்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அமராவதி பிணமாக படுக்கையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தார்.
வழக்கமாக அமராவதியுடன் கமலாவும் இரவு படுத்துத் தூங்குவாராம். ஆனால் செவ்வாய்க்கிழமை இரவு அவர் படுக்க வரவில்லை. தனது அறையிலேயே அவர் படுத்துக் கொண்டாராம்.
இதனால் அமராவதி தனியாகவே படுத்துத் தூங்கியுள்ளார். தனது சாப்பாட்டில் ஏதாவது விஷத்தைக் கலந்து அமராவதி சாப்பிட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அமராவதி ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். ஜூனியர் தேசிய குத்துச் சண்டை பட்டத்தை வென்றழர். 2004ல் நடந்த தென்னிந்திய மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 2006ல் நடந்த சீனியர் தேசிய குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலம் வென்றார்.
இவரது பயிற்சியாளராக இருப்பவர் ஓம்கார் யாதவ். இவர் தங்களது மகளை சித்திரவதைப்படுத்தி வந்ததாகவும், சமீபத்தில் ஒரு தோல்வியை தங்களது மகள் சந்தித்ததால், அவரை கடுமையாக திட்டியதாகவும், இதனால்தான் மனம் உடைந்து அமராவதி தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அமராவதியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications