ரெட்டிகளுடன் சமரசத்திற்கு தயார் எதியூரப்பா - முதல் வேலையாக செயலாளர் மாற்றம்
டெல்லி: ரெட்டி சகோதரர்களுடன் சமாதானமாகப் போக கர்நாடக முதல்வர் எதியூரப்பா தயாராகி விட்டார். முதல் நடவடிக்கையாக தனது செயலாளரை அவர் மாற்றியுள்ளார்.
ரெட்டி சகோதரர்கள் எனப்படும் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி மற்றும் அவர்களது உறவினரான ஸ்ரீராமுலு ஆகியோர் தலைமையிலான கோஷ்டி, கர்நாடக அரசியலை கடந்த சில நாட்களாக ஸ்தம்பிக்க வைத்து வருகிறது.
எதியூரப்பாவை மாற்றியே ஆக வேண்டும் என்று அவர்கள் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதியூரப்பாவை மாற்ற முடியாது என்று பாஜக மேலிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
அதேசமயம், இரு தரப்புக்கும் சாதகமான ஒரு பார்முலாவை வெங்கையா நாயுடுவை வைத்து தயாரித்து இரு தரப்பிடமும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், எதியூரப்பா தற்போது மேலும் இறங்கி வந்துள்ளார். பிரச்சினையை சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வர சில அமைச்சர்களை நீக்குவது, சிலருடைய இலாகாக்களை மாற்றுவது, அதேபோல சில அதிகாரிகளை இடம் மாற்றுவது என்ற முடிவுக்கு எதியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எந்தப் பிரச்சினையாக இருந்தாலம், கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் எனக்கு எந்த உத்தரவை இடுகிறார்களோ அதை ஏற்க நான் கடமைப்பட்டுள்ளேன். அதை அவர்களிடமே சொல்லியும் விட்டேன்.
அதேசமயம், தற்போது பாஜக அமைச்சரவையின் தலைமைப் பொறுப்பில் (முதல்வர் பொறுப்பு) எந்த மாற்றமும் இருக்காது என்றார் எதியூரப்பா.
எதியூரப்பாவின் செயலாளர் மாற்றம்..
எதியூரப்பா சமரசத்திற்கு தயாராகியிருப்பதை உறுதி செய்யும் விதமாக, முதல்வரின் செயலாளராக இருந்து வந்த பாலிகர் மாற்றப்பட்டு அவருக்குப் பதில் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலிகரை மாற்ற வேண்டும் என ரெட்டி சகோதர்கள் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications