ஹெட்லி கைதைத் தொடர்ந்து பாக்.கில் 2 பேர் கைது - ப.சிதம்பரம்

எப்.பி.ஐயின் உத்தரவின் பேரில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிதம்பரம் கூறினார்.
இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத் தாக்குதல் திட்டம் தீட்டிக் கைதாகியுள்ள அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கு, பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது உறுதியாகியுள்ளது.
அதேபோல இந்த சதித் திட்டத்தில் பாகிஸ்தானின் தொடர்பும் நிச்சயமாக உள்ளது. பாகிஸ்தானுக்கு கோல்மேன் பலமுறை போயுள்ளார். எப்பிஐயின் அறிவுரைப்படி தற்போது 2 அல்லது அதற்கு மேற்பட்டோரை பாகிஸ்தான் படையினர் கைது செய்துள்ளனர் என்று எங்களுக்குத் தெரிய வந்துள்ளது என்றார் ப.சிதம்பரம்.
சமீபத்தில் கோல்மேன் மற்றும் பாகிஸ்தானில் பிறந்த கனடா நாட்டு குடிமகன் தவார் ஹூசேன் ராணா ஆகியோரை எப்பிஐ அதிகாரிகள் அமெரிக்காவில் கைது செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படவில்லை...
தொடர்ந்து ப.சிதம்பரம் கூறுகையில், மத்திய அரசு மாவோயிஸ்டுகளுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதுதொடர்பான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவி வருகிறது, அவ்வளவுதான்.
மத்திய அரசுத் தரப்பிலிருந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் திட்டமிடப்படவில்லை. நக்சலைட்டுகளை ஒழிக்கும் வேலையை மாநில அரசுகள் செய்து வருகின்றன. அதற்கு மத்திய அரசு உதவி செய்கிறது. மாநிலங்களின் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் வேலை என்றார் ப.சிதம்பரம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications