ராதாபுரம் பஸ் ஸ்டாண்டில் முத்துவேலர்-அஞ்சுகத்தம்மாள் சிலை திறப்பு
வள்ளியூர்: நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் முதல்வர் கருணாநிதியின் பெற்றோர்களான முத்துவேலர் - அஞ்சுகத்தம்மால் சிலையை திமுகவினர் இன்று திறந்து வைத்தனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பேருந்து நிலையம் இல்லாமல் பொதுமக்கள் திண்டாடி வந்தனர். இந்நிலையில் ராதாபுரத்தில் பேருந்து நிலையம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சம் கொடுத்து பேருந்து நிலையத்திற்கு நிலம் வாங்கி கொடுத்தார்.
அதனடிப்படையில் தமிழக அரசு சிறப்பு நிதி ஓதுக்கிடு செய்து புதிய பேருந்து நிலையம் அமைந்தது. இதனை கடந்த மாதம் 13ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பேரூராட்சி தீர்மானப்படியும், நிலம் கொடுத்தவரின் விருப்பபடியும் புதிய பேருந்து நிலையத்தின் முன் தமிழக முதல்வரின் பெற்றோர்களான முத்துவேலர்-அஞ்சுகத்தம்மாள் சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்களின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது.
ஆனால் இது அரசியல் சர்ச்சைக்கு உள்ளானதால் துணை முதல்வர் ஸ்டாலின் அதனை திறந்து வைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஊராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தின் முன் முத்துவேலர்-அஞ்சுகத்தம்மாள் சிலையை திறக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார் சிவபாலன் தலைமையில் சிலை திறக்கப்பட்டது. அவருடன் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதனையறிந்த திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு, முத்துவேலர்-அஞ்சுகத்தம்மாள் சிலைக்கு மாலை அணிவி்த்து மரியாதை செலுத்தினார். அதனை பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
-
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத்












Click it and Unblock the Notifications