முதல்வர்கள், அமைச்சர்களின் சொத்துக்களை விசாரிக்க குழு - சிபிஐ
ஹைதராபாத்: பல்வேறு முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் நேரடி மற்றும் மறைமுக சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் வலியுறுத்தியுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தும், ஹவாலாவில் ஈடுபட்டும் இப்போது வசமாக சிக்கியுள்ளார் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா.இந்த நிலையில் ஏ.பி.பரதன் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஹைதராபாத்தில் ஏ.பி.பரதன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நமது நாட்டின் அரசியல் மற்றும் சமூக அடித்தளங்களை ஊழல் மெல்ல மெல்ல தின்று வருகிறது. இதில் மதுகோடா மட்டும் இல்லை. பல்வேறு முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் நேரடி மற்றும் மறைமுக சொத்து விவரங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ, நீதித் துறை என இவற்றின் எந்தத் துறையின் மூலமாகவும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார் பரதன்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications