தொடர்ந்து பெய்த அடை மழை - நிரம்பியது வீராணம் ஏரி
சென்னை: சென்னைக்குக் குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
கடலூர் மாவட்டம் வீராணத்தில் உள்ள ஏரி மிகப் பெரியது. இதன் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியாகும். ஆனால் ஏரிக் கரை பலவீனமாக இருப்பதால் 43.50 அடிக்கு மேல் உயர்த்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதைத் தொடர்ந்து ஏரியிலிருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. மேலும் சென்னைக்கும் 76 கன அடி குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.
நேற்று முன் தினம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.80 அடியாக இருந்தது. நேற்று .30 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் தற்போது ஏரியின் நீர் மட்டம் 43.50 அடியாக உள்ளது.
100 அடியைத் தொடும் பாபநாசம்..
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாபநாசம் அணை நீர் மட்டம் 100 அடியை தொடும் நிலையில் உள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்து உள்ளது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, நீர் மட்டமும் 100 அடியை தொடும் நிலையில் உள்ளது.
அணை மூடப்பட்டு இருப்பதாலும், தண்ணீர் வரத்து அதிகம் இருப்பதாலும் எந்த நேரத்திலும் நீர்மட்டம் 100 அடியை தொட்டு விடும் நிலை உள்ளது.
பாபநாசம் பாண தீர்த்த அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பாபநாசம் அணை மூடப்பட்டு இருந்தாலும், தாமிரபரணி ஆற்றில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
மேலும் துணை ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளமும், காட்டாற்று வெள்ளமும் சேர்ந்ததால் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் காரணமாக கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.
இதேபோல் சேர்வலாறு அணையில் நேற்று காலை நிலவரப்படி 85 மி.மீ அளவுக்கு மழை பதிவாகி இருந்தது. அணையின் நீர் மட்டம் 117.62 அடியாக இருந்தது.
மாவட்டத்தின் இன்னொரு முக்கிய அணையான மணிமுத்தாறு அணை பகுதியிலும் நல்ல மழை பெய்து வருகிறது. அங்கு நேற்று காலை நிலவரப்படி 100 மி.மீ. அளவு மழை பதிவாகி இருந்தது. அணையின் நீர் மட்டம் 83.70 அடியாக இருந்தது.
செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை அதன் முழு கொள்ளளவான 36.10 அடி அளவுக்கு நிரம்பி விட்டது. தற்போது வரும் நீர் அப்படியே வெளியேறுகிறது.
கடையம் அருகே உள்ள கடனா நதி நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 83 அடி இருந்தது. அதன் முழு கொள்ளளவு 85 அடியாகும். அதுபோல் ராமநதி அணை நீர் மட்டம் 82 அடியாக இருந்தது. அதன் கொள்ளளவு 84 அடியாகும்.
களக்காடு பகுதியில் பெய்துவரும் கன மழையால் வடக்கு பச்சையாறு அணை நேற்று காலை நிலவரப்படி 25 அடியாக இருந்தது.
நாங்குநேரியான் கால்வாயில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் அந்த கால்வாய் உடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இதுவரை பெய்த மழைக்கு 50 சதவீத குளங்கள் நிரம்பி உள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications