ரூ. 1.28 லட்சம் கோழிக்குஞ்சுள் கடத்தல் - மீட்பு
செங்கோட்டை: தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட ரூ. 1.28 லட்சம் மதிப்புள்ள கோழி குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு நூதன முறையில் பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. திடீர் திடீரென போலீசார் அதிரடி சோதனையால் எரிசாராயம், அரிசி உள்ளிட்டவை பிடிபடுவதும் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஈரோடு பகுதியை சேர்ந்த கோழிகுஞ்சு வியாபாரி ஒருவர் புளியரை பகுதியில் மொத்தமாக 80 கூடைகளில் ஆயிரக்கனக்கான ஆபூர்வ வகையை சேர்ந்த கிரிராஜா என்ற கோழி குஞ்சுகளை இறக்கி வைத்து அங்கிருந்து சைக்கிள் மூலம் கேரள மாநிலம் ஆரியங்காவு முருகன் பாஞ்சல் என்ற பகுதியில் கோழி குஞ்சு கொண்டு போய் வேன் மூலம் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்வதற்காக நேற்று கொண்டு சென்றார். மொத்தமாக கோழி குஞ்சுகளை தமிழக-கேரள வணிக வரித்துறை அதிகாரிகளை ஏமாற்றி கொண்டு சென்றுள்ளார்.
நேற்றும் அப்படியே கொண்டு சென்று வேனில் ஏற்றும்போது அப்பகுதி மக்கள் கேரள வணிக வரித்துறை சோதனை சாவடிக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் விரைந்து வந்துள்ளனர். அதற்குள் கோழி மொத்த வியாபாரி வேனை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டார்.
விரைந்து வந்த அதிகாரிகள் 80 கூடைகளில் இருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகுஞ்சுகளை கைப்பற்றினர்.
இதுகுறித்து கேரள வணிக வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசுக்கு முறையாக ரூ.20 ஆயிரம் விற்பனை வரி செலுத்த வேண்டும். வரி ஏய்ப்பு செய்வதால் ரூ.1.28 லட்சம் மதிப்புள்ள கோழி குஞ்சுகளை பறிமுதல் செய்துள்ளோம் என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications