புயல் சின்னமாக மாறும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை- குஜராத்தில் கரையைக் கடக்கும்!

லட்சத்தீவு அருகே அரபிக் கடலி்ல் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறியுள்ளது.
இந்த புயல் சின்னம் தற்போது மங்களூருக்கு மேற்கே 470 கிலோமீ்ட்டர் தொலைவிலும், கோவாவுக்கு 470 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தெற்கு - தென் மேற்கோ 700 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி, வடக்கு - வட மேற்காக நகர்ந்து, நவம்பர் 12ம் தேதி அதிகாலையில், தெற்கு குஜராத் - வடக்கு கொங்கன் கடற்கரைப் பகுதியில், மஹுவா மற்றும் தஹானு இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் சின்னம் காரணமாக, கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிராவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக பலத்த மழை பெய்யும்.
கடலோரக் கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும்.
கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடற் பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
தமிழகத்திலும் மழை பெய்யும்...
புயல் சின்னம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் மேலும் 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும்.
கடலோரப் பகுதிகளில் பரவலாக கன மழையும், உட்புறங்களில் மிதமான மழையும் இருக்கும். சென்னையில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்திலேயே அதிக அளவாக நீலகிரி மாவட்டம் கேத்தியில் 82 செமீ மழை பெய்துள்ளது.
குன்னூரில் அதிகபட்சமாக 34 செமீ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் குன்னூர் மட்டுமல்லாமல், நீலகிரி மாவட்டமே பெரும் வெள்ளக்காடாகியுள்ளது.
தமிழகத்தில் இன்றைய மழை நிலவரம்...
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கேத்தியில் 82 செமீ மழை பெய்துள்ளது. குன்னூரில் 31, கோத்தகிரியில் 27 செமீ மழை கொட்டித் தீர்த்துள்ளது.
ஊட்டியில் 19, குந்தா பாலத்தில் 15, ராமேஸ்வரத்தில் 13, கொடைக்கானலில் 12, ஓரத்தநாடு, மணியாச்சி, கூடலூர் பஜாரில் தலா 11, செங்கோட்டை 9 செமீ மழை பெய்துள்ளது.
தொழுதூர் 8 செமீ, உளுந்தூர்ப்பேட்டை, திருக்கோவிலூர், பேராவூரணி, அறந்தாங்கி, தென்காசி, மேட்டுப்பாளையத்தில் தலா 7 செமீ மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில்...
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான குதிகள், புதுச்சேரியில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சென்னையில்...
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேக மூட்டமாக காணப்படும். ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications