விருதுநகரில் ஜவுளி பூங்கா: கோவை-மதுரையில் நூல் மண்டிகள்

மத்திய கைத்தறி வளர்ச்சிக் கழகம் சார்பில் பட்டு, கைத்தறி துணிகள் கண்காட்சியை வள்ளுவர் கோட்டத்தில் துவக்கி வைத்த தயாநிதி மாறன் நிருபர்களிடம் பேசுகையில்,
முதல்முறையாக தமிழ்நாட்டில் பட்டு கண்காட்சி மற்றும் விற்பனை சென்னையில் நடைபெறுகிறது. 23ம் தேதி வரை நடக்கும் இந்தக் கண்காட்சியில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் கைத்தறி பட்டு ஆடைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
கதர் தயாரிப்பு குறைந்துகொண்டே வருகிறது. கதர் துணிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே கதர் உற்பத்தியை பெருக்குவதற்காக மத்திய அரசு நூலை மானிய விலையில், மில் விலையிலே வழங்கிக் கொண்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் பூங்கா விருதுநகரில் அமைய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை வைத்தார்.
அந்தக் கோரிக்கையை ஏற்று இப்போது விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சீபுரத்தில் நெசவு பூங்கா அமைக்க வேண்டும் என்றும் முதல்வர் கோரியுள்ளார். இதை ஏற்று ரூ.40 கோடி செலவில் பட்டு நெசவு பூங்காவை அங்கு அமைக்கவுள்ளோம். இதற்கான நிலத்தை மாநில அரசு ஏற்கனவே ஒதுக்கிவிட்டது.
டந்த ஆண்டில் உலக அளவில் 10 முதல் 12 சதவீதம் ஜவுளி ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்தது. தற்போது ஏற்றுமதி சற்று உயர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பஞ்சு உற்பத்தியை பெருக்கவும், பஞ்சு நூல் உற்பத்தியை அதிகரிக்கவும் முதல் முறையாக தமிழ்நாட்டில் காட்டன் கார்ப்பரேஷன் நிறுவனம் கோவை மற்றும் மதுரையில் நூல் மண்டிகளை திறக்கவுள்ளது.
இந்த மண்டிகள் குறைந்த விலையில் பஞ்சு நூல் விற்பனை செய்யும்.
இதுவரை நஷ்டத்தில் இயங்கி வந்த தேசிய ஜவுளிக் கழகத்தை சீரமைத்துள்ளேன். இதனால் முதல் முறையாக லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications