சிப்காட் அமைக்க 1,700 ஏக்கர் விளை நிலத்தை தரிசாக காட்ட முயற்சி?
சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 1,700 ஏக்கர் விளை நிலத்தை தரிசு நிலமாகக் காட்ட முயற்சிகள் நடப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உள்பட்ட மேல மீனாட்சிபுரம், கீழ மீனாட்சிபுரம், தெற்கு ஆவாரங்காடு, ராமச்சந்திராபுரம், சுப்பிரமணியாபுரம், லட்சுமிபுரம், மேட்டூர், முப்பிலிப்பட்டி ஆகிய 8 கிராமங்களை உள்ளடக்கிய 1,700 ஏக்கர் விவசாய நிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்காக இந்த விவசாய நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்கான ஆய்வு பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த 8 கிராமங்களிலும் 70 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட மக்கள். மீதம் உள்ளோர் பிற்படுத்தப்பட்டோர்.
இவர்களுக்கு இந்த நிலம்தான் வாழ்வாதாரமாகும். 1,700 ஏக்கர் விளை நிலத்தை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்தால் 8 கிராமங்களைச் சேர்ந்த 5,000 பேர் வேறு வழி இல்லாமல் அனாதைகளாக நிற்க வேண்டியிருக்கும்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பதவி ஏற்ற திமுக அரசு நிலம் இல்லா ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக உறுதி கூறியது. ஆனால் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கைப்பற்ற நினைப்பது சரியல்ல.
எனவே விளை நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முயற்சியை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு விளை நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முயற்சியை அரசு கைவிடாவிட்டால் தமிழகம் தழுவிய மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என்றார்.
அப்போது 8 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உள்பட 60 பேரும் உடனிருந்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications