சோமாலியா-15 இந்தியர்களுடன் இன்னொரு கப்பல் கடத்தல்
மொகாதீஷு: 15 இந்தியர்கள் உள்பட 18 பேருடன் பனாமா நாட்டுக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து சோமாலியா தலைநகர் மொகாதீஷுவுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக ஜூபா ஜெனரல் டிரேடிங் கம்பெனி என்ற நிறுவனத்திடமிருந்து அல் மிஸான் என்ற கப்பலை சில சோமாலியா வர்த்தகர்கள் வாடகைக்கு அமர்த்தினர்.
இந்தக் கப்பலைத்தான் தற்போது சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டனர். இதுகுறித்து தொழிலதிபர்கள் குழுவின் தலைவரான அப்திரிஸாக் அப்துல்காதிர் என்பவர் கூறுகையில், இந்தக் கப்பலில் 15 இந்தியர்கள், 2 பாகிஸ்தானியர்கள், ஒரு சோமாலியர் இருந்தனர்.
இந்தக் கப்பலில் 3000 டன் வர்த்தகப் பொருட்கள் உள்ளன. இதில் ஆயுதம் இருப்பதாக கூறப்படுவது தவறான தகவலாகும்.
துபாயிலிருந்து அக்டோபர் 24ம் தேதி இந்தக் கப்பல் கிளண்பியது. நவம்பர் 6 அல்லது 7ம் தேதி அது மொகாதிஷு வரும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் கப்பல் வரவில்லை. அதன் பின்னர் அதை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து கடற்கொள்ளையர்களிடமிருந்து எங்களுக்குத் தகவல் வந்துள்ளது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications