மைசூர் ரயில் தடம் புரண்டது- 5 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
புனே: அஜ்மீரில் இருந்து மைசூர் நோக்கி வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இதில் 5 பேர் காயமடைந்தனர்.
மராட்டிய மாநிலம் புனே அருகே ஜிஜூரி பகுதியில் நேற்றிரவு வந்து கொண்டிருந்த போது மைசூர்-அஜ்மீர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி புரண்டன.
இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகள் அலறினார்கள். இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகளை உடனடியாக தொடங்கப்படவில்லை.
மேலும், புயல் மழையும் சேர்ந்து கொண்டதால் பயணிகளை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 5 பயணிகள் காயத்துடன் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக புனே-சதரா வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications