வைகையில் 2வது வெள்ள அபாய எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
தேனி: வைகை அணை தனது முழுக் கொள்ளளவை நெருங்கி விட்டதால் 2வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வைகை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மீட்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
வைகை அணையின் முழுக் கொள்ளளவு 71 அடியாகும். இன்று பிற்பகல் நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 68.5 அடியாக இருந்தது.
ஏற்கனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. தற்போது 2வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையடுத்து தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் வைகை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய பகுதிகளில் மீட்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications