நெல்லையில் வேகமாய் பரவும் வைரஸ் காய்ச்சல்
நெல்லை: தொடர் மழையால் தேங்கி கிடக்கும் நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் வைரஸ் காய்ச்சல் நெல்லை மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் பல இடங்களிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. பல பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்கள், வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல வழியில்லை.
தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் கொசுக்கள் மூலம் காய்ச்சல், சிக்கன்குனியா, மலேரியா உள்ளிட்ட மழை கால நோய்கள் வேகமாக பரவுகின்றன. மேலும் தாமிரபரணி ஆற்றில் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்த தண்ணீர் கலந்ததால் அந்த தண்ணீர் மாசுபட்டுள்ளது. அந்த தண்ணீரை அப்படியே குடிக்கும் போது நோய் எளிதாக பரவுகிறது.
தொடர் மழை எதிரோலியாக நெல்லை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் காயச்சல் வேகமாக பரவுவதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நோயாளிகள் கூட்டம் அலை மோதுகிறது.
நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளி்ன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனையில் அமர்வதற்கு கூட இடம் இல்லாத அளவுக்கு நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகின்றது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் சோர்வு, தொடர் தலைவலி, மூட்டு வலி ஆகியவற்றால் சிரமப்படுகின்றனர். இந்த வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து 5 நாட்கள் வரை இருக்கும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications