பூட்டை போட்டுவிட்டு 'காணாமல் போன' திமுக எம்எல்ஏ!
பழனி: அலுவலகத்திற்கு திண்டுக்கல் பூட்டைப் போட்டு பூட்டி விட்டு மாயமாகி விட்டார் பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ அன்பழகன். அவரைக் காணாமல் மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனராம்.
இது குறித்து பழனி தொகுதி மக்கள் மற்றும் சமூக சேவர்கள் ஆகியோர் கூறுகையில்,
கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. மேலும், அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்க மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும், எந்த பகுதிக்கு என்ன என்ன தேவை என்பதை பாதிக்கப்பட்ட அந்த அந்த பகுதி மக்கள் மனுவை எம்எல்ஏ அலுவலகத்தில் கொடுப்போம்.
மழைக்கால நேரங்களிலும், சேதங்களின் போதும் மீட்பு பணியை துரிதப்படுத்த தொகுதி எம்.எல்.ஏ. முன்னின்று நடவடிக்கைகளை எடுப்பார்.
தற்போது எங்களது தொகுதி எம்எல்ஏ அலுவலகம் பூட்டிக் கிடக்கின்றது. எம்எல்ஏ -வை தொடர்பும் கொள்ள முடியவில்லை. இதனால் மழை நிவாரண பணிகள் பாதிப்படைந்துள்ளது.
எனவே, முதல்வர் கருணாநிதி பழனி தொகுதி மக்கள் மீது கருணை கொண்டு பழனி சட்ட மன்ற உறுப்பினரை மீட்பு மற்றும் நிவாரண பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏவை தொகுதிக்கு தயவு செய்து அனுப்பி வையுங்கள் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் அளவுக்கு எம்.எல்.ஏ. கொண்டு சென்றுள்ளது எவ்வளவு பெரிய ஜனநாயகக் கொடுமை...!
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications