கொசுவை ஒழிக்க நல்ல மருந்து மண்ணெண்ணை- பிரபலமாகும் புதிய முறை
சென்னை: கொசுக்களின் உற்பத்தியை ஒழிக்க தேங்கிக் கிடக்கும் நீரில் சில துளி மண்ணெண்ணையை ஊற்றும் புதிய முறை மக்களிடையே பிரபலமாகியுள்ளது.
தமிழக மக்களிடம் உங்களது முக்கியப் பிரச்சினைகள் என்ன என்று கேட்டால் அவர்கள் கூறும் பட்டியலில் முக்கிய இடம் பிடிப்பது கொசுத் தொல்லையாக இருக்கும்.
அந்த அளவுக்கு தமிழகத்தில் கொசுத் தொல்லை வெகு பிரபலம். தமிழகம் என்றில்லை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்தத் தொல்லைக்கு முடிவே இல்லை.
கொசுக்களால் பரவும் வியாதிகளின் பட்டியல் மிக நீளமானது. சிக்குன்குனியா, டெங்கு என அபாயகரமான காய்ச்சல்கள் கொசுக்களால்தான் பரவுகிறது.
கொசுக்களை ஒழிக்க நகராட்சி, மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபடிதான் உள்ளன. ஆனாலும் கொசுக்கள் ஒழிந்தபாடில்லை.
இந்த நிலையில் புதிய முறை ஒன்று மக்களிடையே பிரபலமாகி வருகிறது. தேங்கிக் கிடக்கும் தண்ணீரில்தான் கொசுக்கள் பெருமளவில் முட்டை போட்டு பல்கிப் பெருகும். இப்படிப்பட்ட தண்ணீர் தேங்கிய இடங்களி்ல் மண்ணெண்ணையை தெளித்தால் கொசு முட்டைகள் அழிந்து போய் விடுகிறதாம்.
இதனால் அங்கு மீண்டும் கொசுக்கள் முட்டை போடுவதில்லை என்று கூறப்படுகிறது. இதை செய்து பார்த்த பலரும் பலன் கிடைப்பதாக கூறுவதால் இந்த புதிய முறை பிரபலமாகி வருகிறது.
வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கிக் கிடக்கும் இடங்களில் சிறிதளவு மண்ணெண்ணையை தெளித்து வைத்தால் அந்த இடத்தில் கொசுக்கள் முட்டையிடுவது அடியோடு நின்று போவதாக பலனடைந்த மக்கள் கூறுகின்றனர்.
நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்...!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications