தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை
சென்னை: தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழை காணப்பட்டது. பொதுவாக வறண்ட வானிலை நிலவியது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் மங்கலாபுரத்தில் 3 செமீ மழை பெய்தது. பாளையங்கோட்டையில் ஒரு செமீ மழை பெய்தது.
தெற்குக் கடலோரத் தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. உட்புற தமிழகத்தில் வழமையை விட கூடுதலான வெப்ப நிலை காணப்பட்டது.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மட்டும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இருக்கலாம்.
சென்னை நகரில் அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தமட்டில், பொதுவாக மேக மூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.
அடுத்த 2 நாட்களுக்கு வானிலையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் இருக்காது.
7 மாவட்டங்களில் கூடுதல் மழை- 7 மாவட்டங்களில் பற்றாக்குறை
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழையின் முதல் கட்டத்தில் 7 மாவட்டங்களில் மட்டும் கூடுதல் மழை பெய்துள்ளது. 7 மாவட்டங்களில் பற்றாக்குறை காணப்பட்டது.
அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் நவம்பர் 11-ந் தேதி வரை பெய்துள்ள மழை அளவு குறித்து வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கை..
நீலகிரியில் அதிகம்...
அக்டோபர் 1-ந் தேதி முதல் நவம்பர் 11-ந் தேதி வரையிலான காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக 71.7 சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளது. இங்கு எப்போதும் இல்லாத அளவாக 187 சதவீதம் கூடுதலாக மழை பெய்து உள்ளது.
இந்த மாவட்டத்தின் இயல்பான மழை அளவு 24.9 செ.மீ. ஆகும்.
நெல்லை மாவட்டத்தில் 40.2 செ.மீ, நாகப்பட்டினத்தில் 63 செ.மீ., கடலூர் மாவட்டத்தில் 52.7 செ.மீ., திண்டுக்கல் மாவட்டத்தில் 30.5 செ.மீ., விழுப்புரம் மாவட்டத்தில் 36.4 செ.மீ., திருவாரூர் மாவட்டத்தில் 37.7 செ.மீ. மழையும் பெய்து இருக்கிறது.
இது வழக்கத்தை விட 2 மடங்கு கூடுதல் ஆகும். வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்த மாவட்டங்களில் எப்போதும் இல்லாத அளவாக கூடுதல் மழை பெய்து உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 72 சதவீதமும், நாகப்பட்டினத்தில் 63 சதவீதமும், கடலூரில் 53 சதவீதமும், விழுப்புரத்தில் 38 சதவீதமும், திருவாரூரில் 24 சதவீதமும், திண்டுக்கல்லில் 21 சதவீதமும் மழை கூடுதலாக பெய்து இருக்கிறது.
17 மாவட்டங்களில் இயல்பான மழை...
சென்னை, அரியலூர், கோவை, ஈரோடு, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, திருச்சி, தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பான அளவே மழை பெய்து உள்ளது.
மதுரையில் பற்றாக்குறை...
தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சேலம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இயல்பான அளவை விட குறைவான அளவு மழை பெய்து உள்ளது என்று அதில் தெரிவிக்க்பட்டுள்ளது.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications