தமிழக மீனவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டிய இலங்கை கடற்படையினர்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு, தனுஷ்கோடி இடையே மீன் பிடிக்க வந்தால் சுட்டுக் கொன்று விடுவோம் என இலங்கை கடற்படை காடையர்கள் மிரட்டியதாக மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து நேற்று மீனவர்கள் சார்பில் ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தரப்பட்டது.
அதில், நாங்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையிலான பகுதியில் இருந்தபோது அங்கு ஆறு படகுகளில் இலங்கைக் கடற்படையினர் வந்தனர். இனிமேல் இங்கு மீன்பிடிக்கக் கூடாது என்று கூறி துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டினர். மீறி வந்தால் சுட்டுக் கொன்று விடுவோம் எனவும் எச்சரித்தனர்.
இதையடுத்து நாங்கள் அவசரமாக கரைக்குத் திரும்பினோம். அப்போது இரு படகுகள் மோதிக் கொண்டதில் அவை சேதமடைந்தன என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், மீனவர்களுக்கு எதிராக தொடர்ந்து இலங்கைக் கடற்படையினர் மேற்கொண்டு வரும் அக்கிரம நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டக் கோரி நவம்பர் 17ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து சென்னை நோக்கி பேரணி நடத்தப் போவதாக தமிழ்நாடு மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து மீனவர்களுக்கு எதிரான இந்த அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த உடனடியாக இலங்கை அரசுடன் பேசுமாறு வலியுறுத்தப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications