சுற்றுச்சூழல் பாதிப்பு- தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் தனியார் தொழிற்சாலையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம், மேட்டுப்பாளையம் தொழிற் பேட்டையில் ஒரு தனியார் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதனால் இந்த தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த பிரச்னை சட்டசபையிலும் எதிரொலித்தது. இதனால் ஒரு வருடத்திற்கு இந்த கம்பெனி மூடப்பட்டது.
ஆனால், இந்த தொழிற்சாலையை சேதராப்பட்டில் உள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யும் வரை இந்த இடத்தில் இந்த தொழிற்சாலையை சுமார் ஒரு வருடத்திற்கு மட்டும் நடத்த அவகாசம் பெற்று, இயங்கி வந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் பெய்த கடும் மழையால் கம்பெனியின் 50 அடி உயர புகைபோக்கி குழாய் உடைந்து விழுந்தது. இதனால், அதிக அளவு நச்சுப்புகை வெளியேறியது.
இதனால் கொந்தளித்துப் போன காந்தி திருநல்லூர் மக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டதோடு, மேட்டுப்பாளையம் நான்கு ரோடு சந்திப்பில் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிடப்பட்டது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications