'கோடா'- விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் மகனுக்கு அடி
ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா மீதான ஊழல் புகாரை விசாரித்து வரும் குழுவில் இடம் பெற்றுள்ள வருமான வரித்துறை இன்ஸ்பெக்டரின் மகன் தாக்கப்பட்டார்.
ரூ. 4000 கோடி அளவுக்கு பெரும் ஊழலில் ஈடுபட்டதாக மது கோடா மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினரும், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ளவருமான வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் ஏ.கே.மாஜி என்பவரின் மகன் அபிஷேக் மாஜி. இவர் செனாப் சாலையில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தபோது இரண்டு பேர் அவரை கற்களால் தாக்கி காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்று விட்டனர்.
அபிஷேக் மாஜி காயமடைந்து கீழே விழுந்த போதும் விடாமல் அவரைத் தாக்கியுள்ளனர். பின்னர் போகும்போது அபிஷேக்கின் செல்போனை பறித்துக் கொண்டு போய் விட்டனர்.
தலையில் காயமடைந்த அபிஷேக், டாடா மெயின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கோடா வழக்கை விசாரித்து வரும் குழுவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டரின் மகன் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications