ஜெய்ப்பூர் அருகே டெல்லி ரயில் கவிழ்ந்து 6 பேர் பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்கா பதக் என்ற இடத்தில் டெல்லி சென்று கொண்டிருந்த மன்டோர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஜோத்பூர் - டெல்லி இடையிலான மன்டோர் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஜெய்ப்பூர் அருகே உள்ள பான்ஸ்கா பதக் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தடம்புரண்டது.
இதில் ரயிலின் அனைத்துப் பெட்டிகளும் கவிழ்ந்தன. இந்த கோர சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த ரயிலில் ஐந்து ஏசி பெட்டிகள், ஏழு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள் உள்ளன.
ஜெய்ப்பூர் - ஜத்வாரா ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் விபத்துக்குள்ளானது.
ஒரு ஏசி பெட்டி முழுமையாக தலைகுப்புற கவிழ்ந்து விட்டது. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹைட்ராலிக் கட்டர்களை வைத்து கவிழ்ந்து விழுந்து கிடக்கும் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications