ஹெட்லி-விசாரிக்க யு.எஸ். விரையும் மும்பை போலீஸ்
மும்பை: இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் திட்டத்தை நடத்த சதித் திட்டம் தீட்டி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லி குறித்த மேலும் தகவல்களை விசாரிக்க மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் போலீஸ் குழுவைச் சேர்ந்த தனிப்படை அதிகாரிகள் அமெரிக்கா செல்லவுள்ளனர்.
மும்பையில் நடந்த பெரும் தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு முன்பு ஹெட்லி மும்பைக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே மும்பைத் தாக்குதலில் ஹெட்லிக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் வந்துள்ளது.
இதையடுத்து ஹெட்லியின் மும்பை உள்ளிட்ட இந்திய பயணங்கள் குறித்து விசாரிக்க மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்து வரும் போலீஸ் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு அமெரிக்கா செல்லவுள்ளது.
இதுகுறித்து மும்பை போலீஸ் தரப்பில் கூறுகையில், ஹெட்லிடின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து தனியாக விசாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு அமெரிக்கா செல்ல வேண்டியது அவசியமாகும். அங்கு சென்று எப்பிஐ அதிகாரிகளைச் சந்தித்து ஹெட்லி குறித்த தகவல்களை சேகரிக்கவுள்ளோம்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஹெட்லிக்குத் தொடர்பு இருந்தால் அதுதொடர்பான உறுதியான ஆதாரங்களைத் திரட்ட வேண்டும். எனவே விரைவில் இதுதொடர்பாக மும்பையிலிருந்து ஒரு குழு அமெரிக்கா செல்லும் என்றனர்.
இதற்கிடையே, அமெரிக்காவின் எப்பிஐ போல இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) ஹெட்லி மற்றும் அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானில் பிறந்த கனடியரான தவார் ஹூசேன் ராணா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து்ளது. மும்பைத் தாக்குதல் உள்ளிட்ட நாட்டில் நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களில் இவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்து என்ஐஏ விசாரிக்கவுள்ளது.
ஹெட்லியை விசாரிக்க ஐபி-ரா குழு அமெரிக்கா சென்று விசாரிக்க அனுமதி கிடைக்காததால் திரும்பி வந்து 2 நாட்களே ஆகியுள்ள நிலையில் மும்பை போலீஸ் குழு செல்வது நினைவுகூறத்தக்கது.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications