நடுக்கடலில் 100 மீனவர்கள் தத்தளிப்பது கண்டுபிடிப்பு-மீட்புப் படைகள் விரைந்தன

Subscribe to Oneindia Tamil

Vallavilai Village
சென்னை: ஃபியான் புயலால் கடலில் இழுத்துச் செல்லப்பட்ட குமரி மாவட்ட மீனவர்களில் 100க்கும் மேற்பட்டோர் நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களை மீட்க மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 40க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் வெளிமாநிலங்களுக்கு விசைப்படகுகளில் சென்று மீன்பிடிப்பது வழக்கம்.

அதன்படி ராமையன்துறை, தூத்துர், இரவிபுத்தன்துறை, வல்லவிளை, மார்த்தாண்டன்துரை, நீரோடி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடந்த வாரம் மகராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், கோவா, கேரளா உள்ளிட்ட அரபிக் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் பலர் இன்னும் கரை திரும்பவில்லை.

குமரியில் இருந்து வெளிமாநில கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற 100 படகுகள் திரும்பி வரவேண்டி உள்ளது. படகுக்கு 10 பேர் வீதம் 1000 பேர் இருந்தனர்.

அரபி கடலில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட புயல் மற்றும் கடல் சீற்றத்தில் மீனவர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதவாறு உள்ளனர். மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளன.

வள்ளவிளை பகுதியில் இருநது கொச்சிக்கு மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்களும், கொச்சி பகுதியில் கரை திரும்பினர். இதே போல் சின்னதுறையில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 பேர் கர்நாடக மாநில பகுதியில் கரை ஓதுங்கியுள்ளனர்.

அதேபோல, 300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் மீன்பிடித்து கொண்டிருந்த பகுதியில் இருந்து 1500 கடல் மைல் தொலைவில் உள்ள கார்வார் துறைமுகம் அருகே கரை ஓதுங்கினர்.

தூத்துர் பகுதியை சேர்ந்த 10 பேர் கொல்லம் அழிக்கால் என்னும் இடத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அரபி கடலில் ஏற்பட்ட புயல் மழையால் வி்சைப்படகு உடைந்துள்ளது. அதில் இருந்த சஜன், ஆல்பரி, சிக்சன் ஆகிய 3 பேர் மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை மீட்க மீட்புப் படையினர் விரைந்து சென்றுள்ளனர்.

கார்வாரில் கரையேறிய மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில், 70 மேற்பட்ட படகுகள் புயலில் சிக்கி கொண்டதும், அதில் இருந்த மீனவர்கள் காற்றின் போக்கில் இழுத்து செல்லப்பட்டதும் தெரிய வந்தது.

அவர்கள் அனைவரும் தூத்துர், இரமயன்துறை, நித்திரவிளை, பூந்துரை, வள்ளவிளை மார்த்தாண்டம் துறை பகுதிகளை சேர்ந்தவர்கள். இதை அறிந்ததும் அப்பகுதி பங்கு தந்தையார் மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தரும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார். இதில் 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகி இருப்பதாகவும், அவர்களை உடனே கண்டுபிடித்து தரும்படியும், கேட்டிருந்தார்.

மீனவ தலைவர்களின் கோரிக்கையை அடுத்து அரசு உடனடி நடவடிக்கையில் இறங்கியது. கொச்சி, மும்பை, கார்வார், துறைமுக பகுதிகளில் உள்ள கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் கடலில் தத்தளிக்கும் மீனவர்களை தேடும் படியும் உத்தரவிடப்பட்டது.

இதில் நடுக்கடலில் காணாமல் போன மீனவர்களில் பலரும் கார்வார், கோவா, ரத்னகிரி, துறைமுக பகுதியில கரையேறி இருப்பது தெரிய வந்தது. அதே நேரம் நடுக்கடலில் கவிழந்த படகில் இருந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் தத்தளிப்படி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்டு கரை சேர்க்கும் பணி இப்போது தொடங்கியுள்ளது. இதற்காக கடற்படையின் அதிவேக ரோந்து படகுகள் கோவா, ரத்னகிரி, மும்பை, கார்வார் பகுதிகளில் இருந்து நடுக்கடல் நோக்கி விரைந்துள்ளன.

இந்த பகுதிகளில்தான் ஏராளமான மீனவர்கள் தத்தளிப்பதாக தப்பி வந்த மீனவர்கள் தெரிவித்தனர். எனவே இந்த பகுதி சென்று தேடும் பணி நடக்கிறது.

53 பேர் மீட்பு...

நாஞ்சில் மீனவர் தொழிலாளர் யூனியன் செயலாளர் ஜான் அலாய்சியஸ் கூறுகையில், 6 படகுகளில் இருந்த 61 மீனவர்களில் 53 பேர் கர்நாடக மாநிலம் கார்வார், மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மற்றும் கோவாவில் மீட்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளன.

புயலின்போது சுனாமி அலைகளை விட மிகப் பெரிய அளவில் அலைகள் வீசியதால் மற்ற மீனவர்கள் அதில் சிக்கி கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நவம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதிக்குள்ளாக, தலா 10 முதல் 12 மீனவர்களுடன் 250 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவற்றில் தற்போது 150 படகுகள் மாயமாகியுள்ளன. அவர்களுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு வாரத்திற்குள் மீனவர்கள் கரை திரும்பி விடுவர். காணாமல் போனவர்களை கண்டுபிடித்து மீட்க கடலோரக் காவல் படையின் உதவி கோரப்பட்டுள்ளது என்றார்.

வழக்கமான நிகழ்வுதான் - தமிழக அரசு..

இந்த நிலையில், மீனவர்கள் காணாமல் போனது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கேரள மாநிலத்தில் உள்ள தங்குதளங்களில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பு மேற்கொள்ளவேண்டி, கடலுக்குச் செல்வது வழக்கமான நிகழ்வு ஆகும்.

அதே போல் 1-11-2009 தேதி முதல் வெவ்வேறு நாட்களில் 150 விசைப்படகுகள் (செவுள் வலை மற்றும் தூண்டில் மீன்பிடிப்பு மேற்கொள்ளும் படகுகள்) கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி மற்றும் ஆழிக்கால் தங்கு தளங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இப்படகுகள் வடக்கு கேரளா முதல் குஜராத் வரையுள்ள கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, 10-11-2009 அன்று நண்பகல் முதல் வீசிய "ஃபியான்'' என்ற கடும் புயலால் பாதிக்கப்பட்டனர்.

இப்புயலினால் பாதிப்பு அடைந்த படகுகள் மற்றும் மீனவர்களை மீட்க உடனடியாக கடலோர காவல்படை மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

13-ம் தேதி கன்னியாகுமரி ஆழ் கடல் மீன்பிடிப்பு சங்கம் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தூத்துக்குடி மண்டல மீன் துறை இணை இயக்குனரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் 7 படகுகள் கடலில் மூழ்கியதாகவும் 8 மீனவர்கள் காணாமல் போனதாகவும் அறியப்பட்டுள்ளது.

மூழ்கிய 7 படகுகளில் ஒரு படகில் சென்ற காயமுற்ற நிலையில் இருந்த 3 மீனவர்கள் கோவா கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்களால் காப்பாற்றப்பட்டு கோவாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் பெறப்பட்டது.

கோவா மற்றும் கர்நாடக மாநில மீன் துறை உயர் அதிகாரிகளுடன் மீன்துறை ஆணையர் தொடர்பு கொண்டு படகு உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவித்து அம்மீனவர்களுக்கு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளித்திட மேற்கொண்ட முயற்சியினால் 3 மீனவர்களும் சிகிச்சை பெற்று திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த 7 படகுகளை தவிர, இதர 3 படகுகள் மீட்கப்பட்டு கரைக்கு இழுத்து வரப்பட்டு கொச்சின் மற்றும் கார்வார் கடற்கரை பகுதியில் உள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற படகுகள் ஒன்றன்பின் ஒன்றாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. காணாமல் போன மீனவர்கள் மற்றும் படகுகளை தேடி கண்டுபிடித்திட தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளது. இதனால் எவரும் பீதி அடையத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் பெரும் சோகம்...

மீனவர்கள் கரைக்குத் திரும்பாததால், அவர்களது கிராமங்களில் பெரும் சோகமும், பரபரப்பும் நிலவுகிறது. குடும்பத்தினர் வீடுகளில் அழுதுபுலம்பியபடி உள்ளனர்.

குமரி மாவட்ட மீனவ சங்கத்தினர் மாவட்ட கலெக்டரை சந்தித்து நடந்த சம்பவங்கள் பற்றி எடுத்து கூறினார்கள்.

கரைக்குத் திரும்பாத மீனவர்களைக் கண்டுபிடித்து மீட்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+