கொழும்பு சென்றார் பிரணாப்-சென்னையில் பொன்முடி சந்தி்ப்பு!

இலங்கை செல்லும் வழியில் சென்னை விமான நிலையம் வந்த அவரை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி சொல்லியனுப்பி விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
டெல்லியிலிருந்து இன்று 11.30 மணியளவில் சென்னை வந்த முகர்ஜி 12.30 மணிக்கு விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டுச் சென்றார். இந்த இடைப்பட்ட நேரத்தில் முகர்ஜியுடன் பொன்முடி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, முகாம்களில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்களுக்கு தேவையான உதவிகளை இலங்கை அரசு செய்ய முகர்ஜி வலியுறுத்துவார். இலங்கை அதிபர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார். இலங்கை பயணம் குறித்து அவர் இந்தியா திரும்பியவுடன் தமிழக முதல்வர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு பேசுவார் என்றார்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கை, இந்தியா வழங்குவதாக கூறியுள்ள ரூ. 500 கோடி நிதிக்கான திட்ட வரைவு, இலங்கையில் மேம்பாலங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிப் பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்டவை குறித்து இந்த பயணத்தின்போது பிரணாப் பேசுவார் என்று கூறப்பட்டாலும் - முழுக்க முழுக்க ராஜபக்சேவைக் காப்பாற்றுவதற்காகவும், அங்கு அவருக்கு எதிரான சக்திகளை சமரசப்படுத்துவதற்காகவுமே பிரணாப் போகிறார் என்று உறுதியாக நம்பப்படுகிறது.
வெளியுறவுத்துறைக்கென்று எஸ்.எம்.கிருஷ்ணா அமைச்சராக உள்ள நிலையில் முக்கியப் பிரச்சினைகளி்ல் அவரை ஓரம் கட்டி வைத்து விடுகிறார் பிரதமர் மன்மோகன் சிங். குறிப்பாக இலங்கை விவகாரங்களில் பிரணாப் முகர்ஜியை விட்டுத்தான் டீல் செய்கிறார். கிட்டத்தட்ட டம்மி அமைச்சர் போல டெல்லியில் இருக்கிறார் கிருஷ்ணா.
தற்போது, அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து பொன்சேகா, போட்டியிடப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இது இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. காரணம், தீவிரமான சீன-பாகிஸ்தான் ஆதரவாளர் பொன்சேகா. அவர் இலங்கை அதிபரானால் நிச்சயம் பெரும் தலைவலியாக மாறி விடும் என இந்தியா கருதுகிறது.
மேலும், ராணுவப் புரட்சி நடக்கபோகிறது என்று கூறி இந்திய ராணுவத்தின் உதவியை ராஜபக்சே நாடினார் என்றும் பெரும் உண்மையை போட்டு உடைத்துள்ளார் பொன்சேகா. இதுவும் இந்தியாவை பெரும் தர்மசங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது.
இந் நிலையில் பிரணாப் இலங்கை செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரணாப்பின் பயணம் ராஜபக்சேவுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும் என்பதைத் தெரிவிக்கவே என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவே இதுவரை கொழும்பு போகாத நிலையில், நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜி படு வேகமாக கொழும்புக்கு ஓடுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தனது பயணத்தின்போது ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை பிரணாப் முகர்ஜி சந்திப்பார். பொன்சேகாவையும் அவர் சந்திக்கக் கூடும் என்றும் ஒரு தகவல் கூறுகிறது.
ராஜபக்சே, பொன்சேகா இடையே சமரசம் ஏற்படுத்த பிரணாப் முயலக்கூடும் என்கிறார்கள்.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவே மீண்டும் வெல்ல வேண்டும் என இந்திய அரசு விரும்புவதாகத் தெரிகிறது. இதற்காகத்தான் சமீபத்தில் ரணில் விக்கிரமசிங்கேவே காங்கிரஸ் கட்சி டெல்லிக்கு அழைத்து ராஜபக்சேவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.
இலங்கைக் கடற்படையுடன் சேர்ந்து சீன வீரர்களும் தற்போது கச்சத்தீவு பகுதியில் நடமாடி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்தும் இந்தியா கவலை அடைந்துள்ளது. பொன்சேகா வந்து விட்டால், சீன ராணுவத்தையே இலங்கைக்கு கொண்டு வந்து உட்கார வைத்து விடுவார் என்று பயப்படுகிறது இந்தியா.
பிரணாப் முகர்ஜியின் இந்தத் திடீர் பயணம், நிச்சயம் தமிழர் பிரச்சினை பற்றி முக்கியமாக பேசுவதற்காக அல்ல என்று எல்.கே.ஜி குழந்தை கூட சொல்லி விடும். காரணம், ராஜபக்சே- பொன்சேகா மோதல் வெடிக்காத வரை அவர் இலங்கை செல்லும் திட்டத்திலேயே இல்லை. திடீரெனதான் இந்த பயணம் திட்டமிடப்பட்டது. அதுவும், இந்திய ராணுவத்தின் உதவியை ராஜபக்சே நாடினார் என்று பொன்சேகா சொல்லி வாய் கூட மூடவில்லை, உடனேயே பிரணாபின் பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகி விட்டது.
ஆனால், இலங்கைக்கு போய் வந்த பின் தமிழர் மறுகுடியேற்றம் குறித்து விவாதிக்கப் போனதாகவும் தமிழர்களின் அரசியல் உரிமைகள் குறித்து ராஜபக்சேவிடம் பேசியதாகவும் மத்திய அரசிடமிருந்து அறிக்கை வரும்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications