இலங்கை மீனவர்களுடன் பேச்சு- தமிழக மீனவர்கள் கோரிக்கை
மதுரை: இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்து தர வேண்டும். அவர்களுடன் மீன் பிடி உரிமை மற்றும் தொடர்ந்து நாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது குறித்து நாங்கள் பேசித் தீர்வு காண்கிறோம் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில், தொடர்ந்து இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை மோசமான முறையில் தாக்கி வருகின்றனர்.
இதை தடுக்கவோ, எதிர்த்துக் குரல் கொடுக்கவோ ஒருமுறை கூட மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக அரசும், இந்த விவகாரத்தை மத்திய அரசுடன் கூறுவதோடு நின்று விடுகிறது. அதற்கு மேல் எதுவும் செய்ய இயலாத நிலையில் தமிழக அரசு உள்ளது.
இப்படி இரு அரசுகளும் மெளனிகளாக இருப்பதால், அனாதைகள் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் தமிழக மீனவர்கள். இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வருகின்றனர். கேட்பாரற்ற நிலையில் இருக்கும் மீனவர்கள் தற்போது மீன்பிடி உரிமைகள் குறித்து இலங்கை மீனவர்களுடன் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மீனவர்களின் உரிமைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் கவுன்சில் தலைவர் அருளானந்தம் கூறுகையில், இரு நாட்டு மீனவர்களையும் சந்தித்துப் பேச வைக்க மத்திய அரசு, மாநில அரசு, இலங்கை அரசு உதவ வேண்டும்.
இப்படி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டால் இரு நாட்டு மீனவர்களும், அவர்களின் மீன் பிடி உரிமைகளை பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். அமைதியாகவும், இணக்கமாகவும் எப்படி மீன் பிடி தொழிலை நடத்துவது என்பதை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்ளட்டும். இதுவே தீர்வுக்கு ஒரே வழி.
ஆண்டுதோறும் ஏராளமான தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்து சித்திரவதை செய்கிறது, அடித்து உதைக்கிறது, சுட்டும் கொல்கிறதது. அதேபோல இந்திய கடலோரக் காவல் படையும், கணிசமான அளவிலான இலங்கை மீனவர்களை கைது செய்யும் நிலையும் உள்ளது.
இதற்கு முடிவு கட்ட இரு நாட்டு மீனவர்களும் சந்தித்துப் பேசுவது அவசியம். அதற்கு மூன்று அரசுகளும் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications