குன்னூரில் மண் சரிவில் சிக்கியது கார் - 3 பேர் பத்திரமாக மீட்பு
குன்னூர்: மண் சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குன்னூரில் கார் ஒன்று மண் சரிவில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அதில் இருந்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
வட கிழக்குப் பருவ மழையின் முதல் கட்டத்தில் நீலகிரி மாவட்டம் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்தது. அதிலிருந்து இன்னும் அது முழுமையாக மீளவில்லை.
முதல் கட்ட மழையின்போது 43 பேர் மண் சரிவுக்குப் பலியானார்கள். சாலைகள் சேதமடைந்தன. ரயில் பாதைகள் சின்னாபின்னமாகியுள்ளன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்து போய் விட்டன.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஓய்ந்திருந்த மழை கடந்த 13ம் தேதி முதல் மீண்டும் பெய்யத் தொடங்கியது. மழை போகப் போக வலுவடைந்ததால் மறுபடியும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
குன்னூரில் இருந்து பேரக்ஸ் செல்லும் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஒரு தனியார் விடுதியின் பக்கத்தின் பெரும் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக குன்னூர் அருகே உள்ள உபதலையை சேர்ந்த ஜெகதீஷ் (35), அவரது மனைவி புஷ்பா (25), நண்பர் ராமலிங்கம் (26) ஆகிய 3 பேரும் கோத்தகிரியில் இருந்து ஒரு காரில் குன்னூருக்கு வந்து கொண்டிருந்தனர்.
இந்த கார் மண் சரிவில் சிக்கிக் கொண்டது. இதில் காரின் ஒரு பகுதியை மண் மூடியதால், தொடர்ந்து காரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களஅ 3 பேரும் சிக்கிக் கொண்டனர்.
காருடன் புதையும் அபாயமும் ஏற்பட்டது. இதையடுத்து உதவி கோரி அவர்கள் அலறினர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்தனர். தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கடுமையாகப் போராடி கதவைத் திறந்து 3 பேரும் பத்திரமாக மீட்டனர். பின்னர் காரை, கயிறு மூலம் கட்டி இழுத்து மீட்டனர்.
குன்னூரில் தற்போது மழை இல்லாவிட்டாலும் கூட ஆங்காங்கு மண் சரிவுகள் தொடர்ந்து கொண்டுள்ளன. இதனால் மக்கள் பெரும் பீதியுடன் உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications