போதையில் தகராறு- 2 போலீஸாருக்கு 'தர்ம' அடி!
ஈரோடு: ஈரோடு அருகே குடித்து விட்டு மாணவர்களிடம் தகராறு செய்த இரு போலீஸ்காரர்களை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
பெருந்துறை காவல் நிலையத்தில் காவலராக இருப்பவர் மேகநாதன். இதேபோல சித்தோடு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருப்பவர் ஞானசேகரன்.
இருவரும் சீருடை இல்லாமல், குடித்து விட்டு போதையில் நடந்து வந்தனர். வெள்ளோடு பகுதிக்கு வந்த அவர்கள் அங்குள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதியைச் சேர்ந்த மாணவர்கள் 6 பேரை வழிமறித்து நிறுத்தினர்.
அவர்களிடம் காரணமே இல்லாமல் கடுமையான வார்த்தைகளில் பேசினர். இதனால் மாணவர்கள் கோபமடைந்தனர். போலீஸாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது அடிதடியாக மாறியது. இரு தரப்பும் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.
சத்தம் கேட்டு மக்கள் திரண்டு விட்டனர். குடிபோதையில் மாணவர்களை வம்புக்கு இழுத்த போலீஸார் மீது கோபம் கொண்ட அவர்கள் இருவரையும் அருகில் இருந்த மின்சாரக் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த வெள்ளோடு போலீஸார் இரு போலீஸாரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயத்துடன் இரு போலீஸாரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இருப்பினும் காவல்துறைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட இரு போலீஸார் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications