ஈழப் போர் முடிந்து 6 மாதங்களாகியும் நிம்மதி பெறாமல் தவிக்கும் தமிழர்கள்

30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த ஈழப் போர் மே 18ம் தேதியுடன் முடிவடைந்ததாக இலங்கை அரசு அறிவித்தது.
போரின் முடிவில் லட்சக்கணக்கான தமிழர்கள் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறி அரசிடம் தஞ்சம் அடைந்தனர். அவர்களை வன்னியில் பல்வேறு முகாம்களில் அடைத்து வைத்தது இலங்கை அரசு.
இந்த முகாம்களுக்கு நலன்புரி கிராமங்கள் என அது பெயரிட்டது. ஆனால் முள்வேலிகளுக்கு மத்தியில், அடைக்கப்பட்டுள்ள அந்தத் தமிழர்களுக்கு இதுவரை எந்த நலமும் ஏற்படவில்லை என்பதே உண்மையாக உள்ளது.
இத்தனை பேரை மறுகுடியேற்றம் செய்து விட்டதாக இலங்கை அரசு கூறி வருகிறது. ஆனால் இதுவரை அவர்கள் தங்களது சொந்த ஊர்களில், சொந்த இருப்பிடங்களில் நிம்மதியாக இருப்பதாக ஒரு வார்த்தை செய்தி கூட எங்கும் வரவில்லை. குறைந்தபட்சம் அவர்கள் சொந்த ஊர்களில் இருப்பதைகக் காட்டும் புகைப்படம் கூட இதுவரை வெளியாகவில்லை.
ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த முகாம்களிலிருந்து வேறு இடத்தில் கொண்டு போய் தங்க வைத்திருப்பதாக இலங்கையிலிருந்த வரும் தகவல்கள் கூறுகின்றன. அதாவது ஒட்டுமொத்த உலகையும் இலங்கை அரசு படு கேஷுவலாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
போர் முடிந்து விட்டதாக கூறி நேற்றுடன் 6 மாதங்களாகி விட்டது. ஆனால் முகாம் தமிழர்களுக்கும், ஒட்டு இலங்கைத் தமிழர்களுக்கும் இதுவரை எந்த விமோச்சனமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் பிரச்சினை உருவாக காரணமாக இருந்த அத்தனை அம்சங்களும் இன்னும் அப்படியேதான் உள்ளன.
அரசியல் தீர்வுக்கு முயற்சியுங்கள் என்று உலக நாடுகள் பலவும் கோரி வந்தபோதிலும் இதுவரை அதுகுறித்து இலங்கை அரசும், அரசியலும் அக்கறை காட்டாமல் உள்ளன.
ராஜபக்சேவா, பொன்சேகாவா என்ற தமிழர்களுக்கு எந்த வகையிலும் உதவாத விவாதங்கள், ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பது, அவர்களுக்கு சலுகைகள் அளி்ப்பது, புத்த விகாரைகளைத் திறப்பது என தமிழர்களுக்கு ஒரு பயனும் அளிக்காத விஷயங்களைப் பற்றி மட்டுமே இலங்கை தற்போது தீவிர கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.
இனப்பிரச்சினையைத் தீர்க்க விடாமல் தடுக்கிறார்கள் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டி வந்த விடுதலைப் புலிகள் இப்போது இல்லை என்று இலங்கை அரசே அறிவித்து விட்டது. இந்த நிலையிலும் கூட அவர்கள் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முயற்சிக்காமல் இன்னும் இரும்புப் பிடியில் தமிழர்களை வைத்துள்ளனர்.
கிட்டத்தட்ட அடிமைப்படுத்தப்பட்ட இனமாக மாறிப் போய் விட்டது தமிழ் இனம் இலங்கையில். முன்பாவது புலிகள் இருந்தார்கள், கொழும்பில் தமிழர்கள் தாக்கப்பட்டால் பதிலுக்கு ராணுவத்தினரை தாக்கி இலங்கையை கட்டுக்குள் வைத்திருந்தனர் புலிகள். ஆனால் இப்போது எந்த நாதியும் இல்லாமல் போய் விட்டனர் தமிழர்கள்.
போரின்போதும், போரின் இறுதி நாட்களின்போதும் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களுக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை இலங்கை, போர்க்காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் இதுவரை விசாரிக்கப்படவில்லை. போர்க்குற்றச்சாட்டுக்கள் இன்னும் வெளிச்சத்திற்கு வராமல் அப்படியே முடங்கிக் கிடக்கிறது.
நிவாரணமும் கிடைக்காமல், நிம்மதியும் இல்லாமல் முள் வேலிக் கம்பிகளுக்கு இடையில் சிக்கி சிதிலமடைந்து கொண்டிருக்கிறது 6 மாதங்களுக்கு முன்பு வரை இலங்கை அரசை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த ஈழத் தமிழ் இனம்.
புலிகளின் ஆயுதங்கள் பறிமுதல்:
இந் நிலையில் திரிகோணமலை நீதிமன்ற வளாகத்தில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள், துப்பாக்கிகள், செல்போன்கள், சோலார் கருவிகள், ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து திரிகோண மலையின் மற்ற பகுதிகளில் ஆயுத தேடுதல் வேட்டை நடக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications