2 நாள் போலீஸ் காவலில் 'அசிங்க' அர்ச்சகர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் வைத்து பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்ட அர்ச்சகர் தேவநாதனை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதித்துள்ளது.
காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகரான தேவநாதன் குருக்கள் என்பவர், கோவில் கருவறைக்குள் வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்து அசிங்கப்படுத்தினார்.
இதை அவரே செல்போன் கேமராவில் பதிவு செய்தும் வைத்திருந்தார். இந்த செல்போன் பழுதடைந்ததால் அதை பழுது பார்க்க ஒரு கடையில் கொடுத்தார். அந்தக் கடைக்காரர், செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்களைப் பார்த்து அதிர்ந்து அவற்றை காப்பி செய்து கொண்டு வெளியில் விட்டு தேவநாதனின் அசிங்கத்தை அம்பலத்திற்குக் கொண்டு வந்தார்.
இதையடுத்து தலைமறைவானார் தேவநாதன். மேலும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை டிஸ்மிஸ் செய்த உயர்நீதிமன்றம் தேவநாதன் மீது மட்டுமல்லாமல், அவருடன் உல்லாசமாக இருந்து அசிங்கத்திற்குத் துணை போன பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து காஞ்சிபுரம் குற்றவியல் மாஜிஸ்திரேட் சுதா முன்பு ஆஜரானார் தேவநாதன். அவரை 30ம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்ட்டார் தேவநாதன்.
இந்த நிலையில் அவரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் மனு செய்தார்.
ஆனால் தேவநாதனின் வக்கீல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அவரது வக்கீல் கூறுகையில், அர்ச்சகர் தேவநாதன் மீது கோவில் நிர்வாகமோ, பக்தர்களோ எந்த புகாரும் கொடுக்கவில்லை. போலீசார் சி.டி. ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. புகார் தொடர்பாக சி.டி. ஆதாரம் எதையும் போலீசார் தாக்கல் செய்யவில்லை. எனவே தேவநாதனை போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் வாதிட்டார்.
இரு தரப்பு கருத்தையும் கேட்ட மாஜிஸ்திரேட் சுதா, தேவநாதனை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.
விசாரணைக்குப்பின் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு தேவநாதனை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த தேவநாதனை போலீஸார் பாதுகாப்புடன் அங்கிருந்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications