விமான கதவு தயாரிக்கும் இந்தியா!: விமானமே தயாரிக்கும் சீனா!!

இந்திய விமானப் படையின் நம்பர் டூ நிலையில் உள்ள பிரணாப் குமார் பர்போரா, இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் (சிஐஐ) மாநாட்டில் பேசுகையில்,
நம் முப்படைகளின் பலத்தை அதிகரித்தாக வேண்டும். இதைச் செய்ய வேண்டியது அரசும் அதிகாரவர்க்கமும் தான். ஆனால், அரசியல்வாதிகளின் முட்டுக்கட்டைகளையும் அதிகாரவர்க்கம் போடும் முட்டுக் கட்டைகளையும் தாண்டித்தான் முப்படைகளும் இயங்க வேண்டிய நிலை உள்ளது.
நமது பாதுகாப்புடன் இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும்போது ஒரு கட்சி பாதுகாப்புத்துறைக்கு ஆயுதங்கள் வாங்க ஒரு திட்டத்தை அனுமதிக்கிறது. அதே கட்சி எதிர்க் கட்சியாகிவிட்டால் தான் தந்த அனுமதியையே எதிர்க்கிறது. அரசியல்வாதிகளின் இந்த குறுகிய மனப்பான்மையால் பாதிக்கப்படுவது நமது பாதுகாப்பும் முப்படைகளின் செயல்திறனும் தான்.
நமது பொதுத்துறை நிறுவனங்கள் சோசலிஷ கொள்கைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கி வருகின்றன. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடும் மட்டமாகவே உள்ளது. இப்படிப்பட்ட நிறுவனங்களை வைத்துக் கொண்டு பாதுகாப்புத்துறையை எப்படி பலப்படுத்த முடியும்?.
நம் நாட்டு ராணுவ பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) , ஐரோப்பாவின் ஏர் பஸ் நிறுவனத்துக்கு கதவு செய்து தருவதையே மிகப் பெரிய சாதனையாக நினைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், சீனா பொது நிறுவனங்கள் முழு விமானத்தையே தயாரித்து ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் கூட ஆயுத ஏற்றுமதியில நம்மைவிட முன்னேறியிருக்கிறது.
ஆனால், நாம் ஆயுதங்களுக்காக இன்னும் வெளிநாட்டு நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அந்த நிறுவனங்கள் நினைத்தால் ஆயுதங்களைத் தருவார்கள்.. நினைத்தால் நிறுத்தி விடுகிறார்கள். நமக்குத் தேவையான 70 சதவீத ஆயுதங்களை இன்னும் இறக்குமதி தான் செய்து கொண்டிருக்கிறோம்.
நாம் போக்ரானில் அணு குண்டு போட்டவுடன் ஆயுதங்கள் தருவதை அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் நிறுத்தின.
நமது ராணுவ பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்த அதில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்க வேண்டும். இதை ஆண்டாண்டு காலமாக சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்களே தவிர, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆயுத உற்பத்தியில் இந்திய தனியார் நிறுவனங்களுக்கு முழு அளவில் அனுமதி தரப்பட வேண்டும். இந்த நிறுவனங்களுக்க நிதியுதவியும், ஆயுத ஏற்றுமதி செய்யும் சுதந்திரமும் தரப்பட வேண்டும். இல்லாவிட்டால் எந்தத் தனியார் நிறுவனமும் ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட முன்வராது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை நம்பிக் கொண்டிருக்காமல் விமானப் படை தனியார் நிறுவனங்களிடம் 50 விமானத் தளங்களை ஒப்படைத்தது. அவை மிகச் சிறப்பாக நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன என்றார் பர்போரா.
சில நாட்களுக்கு முன் ராணுவம் உள்பட முப்படைகளில் பெண்களை சேர்ப்பது வேஸ்ட், அது ஒரு தேவையில்லாத சுமை என்று கருத்துத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் பர்போரா. இந் நிலையில் இப்போது அரசியல்வாதிகளையும் பொதுத்துறை நிறுவனங்களையும் காய்ச்சி எடுத்துள்ளார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications