வாடிக்கையர் சேவையில் முந்தைய தலைமுறைக்கும் பின்னே உள்ள பிஎஸ்என்எல்
சென்னை: இன்று முதல் சென்னை மற்றும் தமிழகத்தில் 3 ஜி சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வைத்து விழா நடத்தி அறிமுகப் படலத்தை முடித்துவிட்டார்கள் அதிகாரிகள். அவரவர் கேக் - ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு அத்தோடு மறந்துவிட்டார்கள் விஷயத்தை.
சரி... பிஎஸ்என்எல் 3 ஜி சேவை மக்களைச் சென்று சேர்வது கிடக்கட்டும்... அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்குத் தெரிந்திருக்கிறதா முதலில் என்று பார்க்க, சென்னை தாமஸ் மலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு ஒரு நடை போனோம்.
செல்போன் சேவைப் பிரிவில் அமர்ந்திருந்த ஒரு பெண் அலுவலரிடம் 3 ஜி பற்றிய விவரம் கேட்டோம். பக்கத்து சீட்காரருடனான தனது பேச்சுக் கச்சேரியை வேண்டா வெறுப்பாக இடை நிறுத்திவிட்டு, எங்களுக்கு எந்தத் தகவலுமில்லை... என்றவர், வெளியே போஸ்டர் ஒட்டியிருக்கிறோம் படித்துக் கொள்ளுங்கள் என்றார்.
சரி, வேறு அலுவலரைக் கேட்கலாம் என்று முடிவு செய்து போய்க் கேட்டோம். அவரோ சாதாரண செல்போன் அழைப்புக் கட்டண விவரங்கள் அடங்கிய ஒரு தாளைக் கையில் கொடுத்து, இதிலிருக்கு படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூசாமல் கொடுத்துவிட்டு போயே போய்விட்டார்.
வெறுத்துப் போய்விட்டது... சரி இந்த ஒரு அலுவலகம்தான் இப்படியா... அல்லது மற்ற அலுவலகங்களிலும் 3 ஜிக்கு வாடிக்கையாளர் சேவை லட்சணம் இதுதானா என்று அறிய கேகே நகர் இணைப்பகத்துக்கு ஒரு விசிட் அடித்தோம். அங்கே இருந்த பெண் ஊழியர், என்ன 3 ஜி விவரம் வேணுமா... இந்தாங்க என்று ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கையில் கொடுத்தார். ஏதும் பேசக்கூட அனுமதிக்கவில்லை. அந்தப் பிரசுரத்தில் 3 ஜி மொபைலின் மகாத்மியங்களை ஒரு வண்டி அளவுக்கு அடித்துத் தள்ளியிருந்தார்கள்.
ஆனால் எப்போது சர்வீஸ் கிடைக்கும், கட்டணம் எவ்வளவு, தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் எவ்வளவு, புதிய வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் என்ன... பிராட்பேண்ட் ஸ்பீட் என்ன... தொலைக்காட்சி சேவை முற்றிலும் இலவசமா அல்லது சேனலுக்கு இவ்வளவு என்று பாக்கெட்டில் கை வைப்பார்களா? ம்ஹூம்.. ஒரு தகவலுமில்லை.
பானையிலிருக்கிற எல்லா சோற்றையும் கொட்டியா பதம் பார்க்க முடியும்... அட போங்கப்பா... இது 3 ஜி இல்லை... மைனஸ் 3 ஜி !!
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications