மும்பை தாக்குதல்-இத்தாலியில் பாக்.கை சேர்ந்த தந்தை-மகன் கைது
லண்டன்: மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனை இத்தாலி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை நடந்த ரெய்டில் இருவரும் கைது செய்யப்பட்டனர். பிரஸ்ஸியா என்ற நகரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இத்தாலி காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஸ்டெபனோ பொன்சி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், இருவரும் மும்பைத் தாக்குதலைத் திட்டமிட்ட தீவிரவாதிகள் மற்றும் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பணப் பரிமாற்றம் உள்ளிட்ட நிதியுதவிகளைச் செய்துள்ளதாக சந்தேககிக்கப்படுகிறது.
ஒரு பணப் பரிமாற்ற ஏஜென்சி மூலம் இந்த நிதியுதவி செய்யப்பட்டது. இந்தப் பணத்தை பயன்படுத்தித்தான் இன்டர்நெட் போன் கணக்கைத் தொடங்கி அதன் மூலம், பாகிஸ்தானில் இருந்த படி சதியாளர்கள், மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி இந்த இருவரும் இன்டர்நெட் போன் கணக்கை தொடங்குவதற்குத் தேவையான பணத்தை அனுப்பி வைத்தனர் என்று கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர், எந்த ஊர் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை கசாப் மட்டுமே முக்கிய நபராக சிக்கியுள்ளான். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு வெளியே ஒரு நாட்டில் மும்பைத் தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைதாகியுள்ளது முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications