ரெட்டி சகோதரர்களிடம் ரூ. 5000 கோடி வாங்கினார் ராஜசேகர ரெட்டி - நாயுடு
சித்தூர்: கர்நாடகத்தைச் சேர்ந்த ரெட்டி சகோதரர்களிடமிருந்து மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி ரூ. 5000 கோடி பணம் வாங்கினார். இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திராவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் அங்கு நேற்றுடன் முடிவடைந்தது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, பிரஜா ராஜ்யம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக களம் இறங்கியுள்ளன. ஆந்திர முதல்வர் ரோசய்யா (காங்கிரஸ்), தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிரஜா ராஜ்யம் தலைவர் சிரஞ்சீவி ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தனர்.
ஹைதராபாத்தில் நடந்த மாநகராட்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, அவரது சகோதரர் சுதாகர் ரெட்டி ஆகியோர் ஆந்திராவில் ஏராளமான இரும்பு கனிம சுரங்கங்கள் நடத்தி வருகிறார்கள்.
அவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி வருமானமாக கிடைத்தது. அதில் ரூ.5 ஆயிரம் கோடியை ராஜசேகர ரெட்டிக்கு கொடுத்தனர்.
இந்த பணத்தை வைத்துதான் அவரது குடும்பத்தினர் டி.வி. சேனல், பத்திரிகைகள் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த முறைகேடு பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும்.
ராஜசேகர ரெட்டியின் இந்த முறைகேடுகள் விரைவில் வெளிவரும். நாட்டில் நடைபெறும் முக்கிய ஊழல் புகார் வழக்குகளை தற்காலிகமாக வேண்டுமானால் மூடிமறைத்து விடலாம். எதிர்காலத்தில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமையும் போது அத்தனை ஊழல் வழக்குகளும் முறைப்படி நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்றார்.
நாயுடுவின் இந்தப் புகார் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications